பட்டனை தட்டினால் விரும்பிய உணவுகளை தயாரித்து தரும் எந்திரம்: பிளஸ்-2 மாணவர் உருவாக்கினார்

posted in: மற்றவை | 1

maalaimalarsidcbface93-53d2-4497-8bd2-ad7f9eb3dc83பீகார் மாநிலம் பகல்பூர் ஆர்யபட்டா பப்ளிக் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர்கள் அபிஷேக்.

இவர் தானியங்கி முறையில் உணவு தயாரிக்கும் எந்திரம் ஒன்றை கண்டுபிடித்து உள்ளார். மின்சாரம் மூலம் செயல்படும் இந்த எந்திரத்தில் ஒவ்வொரு உணவு தயாரிக்கும் முறையும் புரோகிராம் ஆக பதிவு செய்து பொருத்தி உள்ளார்.

12 வகையான உணவு பொருட்களை இந்த எந்திரத்தில் உள்ள அதற்கான அறைகளில் வைக்கலாம். இதில் இருந்து நமக்கு தேவையான உணவை அந்த எந்திரமே எடுத்து உணவு தயாரித்து கொடுத்து விடுகிறது.

ஒவ்வொரு உணவுக்கும் ஒரு பட்டன் உண்டு. அதை தட்டினால் அதுவே உடனே சமையல் வேலையை தொடங்கி உணவு தயாரித்து தந்து விடுகிறது. அதாவது இந்த 12 பொருட்களில் இருந்து தயாரிக்கக் கூடிய உணவை மட்டும் தயாரிக்கும்.

தற்போது டீ, தாளித்த அரிசி உணவு, வடநாட்டு கோலே ஆகிய உணவுகளை தயாரித்து கொடுக்கிறது.

இந்த எந்திரத்தில் மேலும் பல பொருட்களை வைத்து புரோகிராமும் செய்து வைத்தால் இன்னும் பல உணவுகளையும் தயாரிக்க முடியும்.

தேசிய அறிவியல் கண்டுபிடிப்பு பவுண்டேசன் நடத்திய போட்டியில் இந்த எந்திரம் இடம் பெற்றது. இதில் அபிஷேக்குக்கு முதல் பரிசு கிடைத்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அபிஷேக்கை பாராட்டி பரிசு வழங்கினார்.

இதுபற்றி அபிஷேக் கூறியதாவது:-

நான் என் தாயார் சமையல் வேலை செய்யும்போது அவருக்கு உதவியாக இருப்பேன். அப்போதுதான் சமையல் எந்திரத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆர்வம் வந்தது.

சில நிறுவனங்கள் என்னை இந்த கண்டுபிடிப்பு பற்றி அறிய தொடர்பு கொண்டு இருக்கின்றன. ஆனால் இதற்கான காப்புரிமை பெற முயற்சித்து வருகிறேன். அதன் பிறகே தயாரிப்பு முறை பற்றி நிறுவனங்களுக்கு கொடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
1 1

  1. HMT.ANSARI.

    ஹெச் எம் டி. அன்சாரி
    DUBAI, INDIA.
    ansareee@yahoo.com, 00971508406322
    என் அன்புள்ள, தொழில் செய்ய விரும்பும்
    தமிழ் தொழில் அதிபர்களே ! நான், ஹெச்.எம் .டி.அன்சாரி.
    துபாயிலிருந்து, என்னிடம் 20 க்கும். மேற்ப்பட்ட
    சின்ன சின்ன தொழில்களும், பெரிய பெரிய,
    பல கோடி முதலீடு செய்யும் தொழில்களும்,
    இன்னும் நடை முறையில் உள்ள புத்தம்,
    புதிய , பழைய தொழில்களும்,இன்னும்,
    யாரும் நம்மை பார்த்துக் காப்பி, அடித்து
    செய்ய முடியாத தொழில்களும், என்னி
    டம் இருக்கின்றது. தாங்கள் என்னைத்
    தொடர்புக் கொள்ளவும் இன்னும் விசயங்
    களையும், விபரங்களையும்,,, விளக்கங்க
    ளையும், இலவசமாக அறிய,
    ஹெச் எம் டி. அன்சாரி.
    INDIA DUBAI,
    ansareee@yahoo.com,
    00971508406322.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *