லண்டன்:படிப்பதற்காக செல்வதாகக் கூறி இந்தியர்கள் பலர், மாணவர்களுக்கான விசாவை பெற்று பிரிட்டனில் குடியேறுவது அதிகரித்துள்ளது.பிரிட்டனில் தங்குவதற்கு பல காரணங்கள் தேவை.
ஆனால், அங்கு படிப்பதற்கு, அடிப்படை கல்வி தேவையுடன் வங்கி இருப்பில் போதுமான பணம் இருந்தால் போதுமானது. மாணவர்களுக்கான விசாவை பெற்று விடலாம். இந்த சலுகையை பயன்படுத்தி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பலர், சமீப காலமாக பிரிட்டனுக்கு அதிகமாக செல்கின்றனர்.பிரிட்டனில் படிக்க செல்பவர்களுக்கு தங்கள் வங்கி கணக்கில் குறைந்த பட்சம் ஐந்து லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கையிருப்பு இருக்க வேண்டும். விசா வழங்குவதற்கு முன்னர் பிரிட்டன் குடியேற்ற அதிகாரிகள் இதை சரிபார்க்கின்றனர்.
எனவே, பிரிட்டன் செல்ல விரும்புவோர், கடன் வாங்கி வங்கியில் செலுத்தி தங்களுக்கு இவ்வளவு தொகை கையிருப்பு உள்ளதாக பிரிட்டன் தூதரக அலுவலகத்தில் கூறி விசா விண்ணப்பத்தை பெற்று விடுகின்றனர்.இது போன்ற போலி காரணங்களைக் கூறி பிரிட்டன் செல்வோர், எந்த கல்லூரியிலும் படிப்பதில்லை. ஏதாவது ஒரு வேலை பார்ப்பதற்காக இந்த குறுக்கு வழியை பயன்படுத்தி கொள்கின்றனர்.வழக்கமாக ஓராண்டில் 29 ஆயிரம் பேர் இந்தியாவிலிருந்து பிரிட்டன் சென்று கொண்டிருந்தனர். கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 52 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்துள்ள பிரிட்டன், மாணவர்கள் போர்வையில் இந்தியர்கள் குடியேறுவதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
Leave a Reply