புதுடெல்லி: பிஎப் பிடித்தம் செய்வதற்கான சம்பள உச்சவரம்பு, ரூ.6,500ல் இருந்து ரூ.15,000 ஆகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, டெல்லியில் நாளை நடைபெறும் பிஎப் மத்திய வாரிய கூட்டத்தில் வெளியாகிறது.
இப்போதைய பிஎப் விதிமுறைப்படி, அடிப்படைச் சம்பளம், அகவிலைப்படி சேர்ந்து அதிகபட்சம் ரூ.6,500 பெறுவோருக்கு, அதில் 12 சதவீதத்தை மாதந்தோறும் நிறுவனம் தனது பிஎப் பங்காக செலுத்த வேண்டும்.
இதனால், பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி செய்வோர், சிறிய நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு பேசிக், டிஏ என காட்டாமல், மொத்த ஊதியமாக ரூ.6,500க்கு மேல் அளித்தாலும் பிஎப் செலுத்துவதில்லை.
இந்நிலையில், பிஎப் பிடித்தம் செய்ய தொழிலாளர்களின் பேசிக், டிஏ சேர்ந்த அதிகபட்ச தொகையை ரூ.15,000 ஆக உயர்த்த மத்திய தொழிலாளர் நலத் துறைக்கு பிஎப் அறக்கட்டளை வாரியம் சமீபத்தில் பரிந்துரை அனுப்பியிருந்தது.
அது பற்றி விவாதிக்கமத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பிஎப் அறக்கட்டளை வாரியக் கூட்டம், டெல்லியில் நாளை கூடுகிறது. அதில் பிஎப் பிடித்தம் செய்வதற்கான சம்பள உச்சவரம்பை ரூ.15,000 ஆக உயர்த்தி கார்கே அறிவிப்பார் எனத் தெரிகிறது.
Leave a Reply