பெங்களூர்: கர்நாடக மேலவை தேர்தலில் வெற்றி பெற குதிரை பேரம் நடக்கிறது. மேலவை தேர்தல் வாக்காளர்களான தாலுகா, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் தனியார் ஓட்டல்கள், ரிசார்ட்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடக சட்ட மேலவையில் காலியாக உள்ள 25 இடங்களுக்கு வரும் 18ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில், பா.ஜ., காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த. கட்சிகள் போட்டியிடுகின்றன. காங்கிரசும் ம.ஜ.த.வும் கூட்டணி அமைத்துள்ளன. தேர்தலில் உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்களித்து மேலவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
எம்.எல்.ஏ.க்களுக்கு நிகரான அதிகாரம் நிறைந்த இந்த பதவியை பிடிப்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
பேரவையில் பா.ஜ. பெரும்பான்மை பெறுவதற்கு ‘ஆபரேசன் கமலா’ திட்டம் கைகொடுத்தது. அதற்கு பணம் கொடுத்து உதவியவர்கள் பெல்லாரி ரெட்டி சகோதரர்கள். தங்கள் செல்வாக்கை மேலவை தேர்தலிலும் தக்க வைப்பதற்காக பெல்லாரி மாவட்ட தாலுகா, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு பண ஆசை காட்டி இழுத்துள்ளனர். அவர்கள் மனம் மாறாமல் இருப்பதற்காக, பிரபல ரிசார்ட்களுக்கு அழைத்துச் சென்று பாதுகாத்து வருகின்றனர்.
கண்காணிப்பு குழு: மேலவை தேர்தல்களில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க, தேர்தல் ஆணையம் 19 கண்காணிப்பு குழுக்களை அமைத்துள்ளது. ஒரு குழுவில் 3 பேர் இருக்கிறார்கள். வாக்காளர்களுக்கு பணம், பரிசுகள் கொடுப்பதை இந்த குழு தடுக்கும். முறைகேடுகள் நடப்பதாக தெரிந்தால், மாவட்ட தேர்தல் ஆணையத்துக்கு இவர்கள் தகவல் தெரிவிப்பார்கள்.
Leave a Reply