புதுச்சேரி : பாரதியார் பல்கலைக்கூடத்தில் லிம்கா சாதனைக் காக மாணவர்கள் செய்தித் தாளில் ஓவியம் உருவாக்கியுள்ளனர்.
பாரதியார் பல்கலைக் கூடத்தில் 3ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் ஆரோக் கியராஜ் ஜீன் ஹெர்வ் டெல்பின், கபில்தேவ், பச்சையப்பன் ஆகியோர் இணைந்து தேசிய அள வில் லிம்கா சாதனைக்காக 100 அடி உள்ள ஒரு அறையில் செய்தித் தாள்களை ஒட்டியும், செய்தித்தா ளால் ஓவியம் உருவாக்கியுள்ளனர். மாணவர்களின் இந்த படைப்பை பாரதியார் பல்கலைக்கூட உறுப்பினர் செயலர் மாணிக்கசாமி நேற்று திறந்து வைத்தார். பல்கலைக்கூட முதல்வர் சிற்பி ஜெயராமன் முன் னிலை வகித்தார். சென்னை அரசு கவின் கல்லூரி முதல்வர் மனோகரன், ஓவியர் ஷிமாதேவி ஆகியோர் ஓவியத்தை பார்வையிட்டு லிம்கா சாதனைக்கு பரிந்துரை செய்துள்ளனர். வரும் 10ம் தேதி வரை நடக்கும் இந்த கண்காட் சியை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்கள் பார் வையிடலாம்.
Leave a Reply