மும்பை: வங்கிகளின் டெபாசிட் திட்டத்தை விட, அஞ்சலக சேமிப்பையே பலரும் விரும்புகின்றனர். வங்கிகளில் செய்யப்பட்ட டெபாசிட் சேமிப்பு 7.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஆனால், அஞ்சலகங்களில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை 32 சதவீதம் உயர்ந்துள்ளது.ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி 2009ம் ஆண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் உயர்ந்த டெபாசிட் தொகை அளவு ரூ.2,85,897 கோடி. உயர்வு 7.5 சதவீதம். ஆனால் இதே காலத்தில் இந்திய அஞ்சலகங்களில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை ரூ.79,237 கோடி. சென்ற ஆண்டு இதே காலத்தில் டெபாசிட் தொகை ரூ.56,347 கோடியாக இருந்தது. உயர்வு 32 சதவீதம் ஆகும். வங்கிகள் டெபாசிட்டுக்கு தரும் வட்டியை படிப்படியாகக் குறைத்து வருவதால் நடுத்தர வகுப்பினர் அஞ்சல டெபாசிட் திட்டங்களுக்கு திரும்பி உள்ளனர். கூடுதல் வட்டி, வருமான வரிச் சலுகைகள்,
கடன் வசதி, சேமிப்பு காலத்தின் இறுதியில் கிடைக்கும் போனஸ் ஆகியவை அஞ்சலக சேமிப்புத் திட்டங்களுக்கு மக்களை கவர்ந்திழுக்கின்றன.
அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் பெரிதும் வ¤ரும்பப்படுவது மாதாந்திர வருமானத் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் 2009ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையின் அளவு ரூ.11,422 கோடியிலிருந்து 22,299 கோடியாக அதிகரித்துள்ளது. உயர்வு கிட்டத்தட்ட இரு மடங்காகும்.ஆனால் வளர்ச்சி அடிப்படையில் பார்த்தால் சீனியர் சிட்டிசன்களுக்கான சேமிப்பு திட்டம் நான்கு மடங்கு வளர்ச்சியைத் தாண்டி உள்ளது. 2008ம் ஆண்டு ஏப்ரல் & செப்டம்பர் வரையிலான டெபாசிட் ரூ.765 கோடி. 2009 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் டெபாசிட்டான தொகை ரூ 3042 கோடி ஆகும்.
Leave a Reply