வருகிறது பறக்கும் கார் : 2011ம் ஆண்டு அறிமுகம்

990369சாலையிலும் ஓடும், ஆகாயத்திலும் பறக்கும் வகையிலான கார் ஒன்றை, உலகிலேயே முதல் முறையாக, அமெரிக்க நிறுவனம் தயாரித்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த கார், 2011ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த டெராப்யூஜியாஸ் எனும் நிறுவனம், பறக்கும் காரைத் தயாரிக்க உள்ளது. இறக்கைகளுடன் தயாரிக்கப்படும் இந்தக் கார், சாலையில் செல்லும் போது சக்கரங்களையும், பறக்கும் போது, மடிக்கப் பட்ட இறக்கைகளை விரித்துக் கொண்டும் செல்லும். அதிக கனமில்லாமல், எளிதில் இயக்கக் கூடிய விளையாட்டு விமானம் போன்று காணப்படும் இந்த விமான காரை, பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் ஓட்டலாம்; இரண்டு பேர் பயணம் செய்யலாம். புறப்படும் இடத்தில் இருந்து சாலை வழியாக விமான நிலையம் வரை காராக செல்லும் இந்த வாகனம், விமான நிலையத்தில் இருந்து விமானம் போன்று விண்ணில் பறந்து செல்லும்.

விமான நிலைய கட்டுப்பாட்டில் மற்ற விமானங்கள் இயங்குவது போலவே, இந்த கார் விமானமும் இயங்கும். இந்த காரில் பலவித நன்மைகள் உள்ளன. வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு சென்ற பின், அங்கு இந்த வாகனத்தை, ‘பார்க்கிங்’ ஏரியாவில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. பறந்து செல்லும் போது மோசமான வானிலை, புயல் காற்று போன்ற இடர்பாடுகள் ஏற்பட் டால், குறைந்த கால இடைவெளியில் சாலையில் இறங்கி விடலாம். சாலையில் கார் சென்று கொண் டிருக்கும் போது, தேவைப் பட்டால் 30 வினாடிக்குள் பறக்கும் தன்மைக்கு மாறும். அரசிடம் முறையாக அனுமதி பெற்று விற்பனை செய்ய, கார் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. பறக்கும் காரின் மாதிரி, தற்போது அனுமதிக்காக அனுப்பி வைக்கப் பட்டுள் ளது. அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்படும் இந்த நவீன கார், மிக விரைவில் சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விலை, 95 லட்ச ரூபாய். வரும் 2011ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *