தலச்சேரி : மருத்துவமனையில் பணியாற்றும் வாலிபரை பழிதீர்க்கும் எண்ணத்துடன் பருந்து ஒன்று விடாமல் துரத்தி துரத்தி கொத்தி வருகிறது. கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி அடுத்த கோடியேறியில் உள்ள மலபார் புற்றுநோய் மைய கேன்டீனில் பணியாற்றி வருபவர் ஷிஜின்ராஜ். இவர், எப்போது வெளியே சென்றாலும் அவருக்காக காத்திருக்கும் பருந்து ஒன்று பறந்து வந்து அவரை கொத்த தொடங்கி விடும்.
கடந்தாண்டு வரை அம்மருத்துவமனை கேன்டீனில் அவருடன் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவாலிபரும் பணியாற்றி வந்தார். இருவரும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருப்பார்கள். அப்போது, கேன்டீனில் இருந்து வெளியே வீசப்படும் உணவுக் கழிவுகளை தின்ன பருந்து கூட்டம் அங்கே வருவதுண்டு.அவ்வாறு பறந்து வந்த பருந்தின் மீது வங்கதேசத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருநாள் வென்னீர் ஊற்றினார். அதற்கு பிறகு தான் இதுபோன்ற சம்பவம் தொடர்கதையாகி விட்டது. ஆனால், பருந்தின் மீது வென்னீர் ஊற்றிய வங்கதேச வாலிபர், கேன்டீன் கட்டடப் பணி முடிந்ததும் தாயகம் திரும்பி விட்டார்.அவரை போலவே தோற்றமளிக்கும் ஷிஜின்ராஜ் மீது பருந்தின் பழி வாங்கும் எண்ணம் திரும்பி விட்டது. ஒரு வருடமாக பருந்தின் தாக்குதல் காரணமாக பலரும், “பருந்து ஷிஜின்’ என்றே அவரை அழைக்கத் தொடங்கி விட்டனர்.
பருந்தின் தாக்குதல் காரணமாக அவரது உடலின் பல இடங்களில் காயங்கள், தழும்புகள் தோன்றி விட்டன. களறி சண்டை பயிற்சி முடித்துள்ள அவர், பல முறை அதை பயன்படுத்தி தான் பருந்தின் தாக்குதலில் இருந்து தப்பி வந்துள்ளார்.அவர் வெளியே செல் லும்போது சாக்குப்பையால் முகத்தை மூடிக் கொண்டு செல்ல வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருடன் செல்பவர்களை பருந்து தாக்குவதில்லை என்று மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் பல நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் தெரிவித்தனர்.
Leave a Reply