சென்னை: இந்திய விமானப் படை விமானங்களுக்கு டயர் தயாரிக்கும் பணியில் எம்.ஆர்.எப்., நிறுவனம் தீவிரமாக இறக்கி உள்ளது. பொதுவாக இந்திய விமானப் படைக்கு தேவையான டயர்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படுகிறது.
எம்.ஆர்.எப்., தயாரிக்கும் டயர்கள் தற்போது, விமானபடையின் சேடக் ரக ஹெலிகாப்டர்களுக்கு பயன்படுத்தப் படுகிறது. இந்நிலையில், விமான படை விமானங்களுக்கான டயர்களை வடிவமைத்து தருவதற்கான வேலையில் எம்.ஆர்.எப்., நிறுவனம் தீவிரமாக இறக்கி உள்ளது. விமானப் படை விமானங்களுக்கு தேவையான டயர்களை தயாரித்து தர, ராணுவ விமானங்கள் பறப்பதற்கான சான்றிதழ் அளிக்கும் மையம் சான்று அளிக்க வேண்டும். அதன் சான்றிதழைப் பெற்று விட்டால் ராணுவ விமானங்களுக்கான டயர்களையும் எம்ஆர்எப் தயாரித்து அளிக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. விமானப்படை விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கு அளிக்கும் டயர்களின் மதிப்பை கணக்கிடக்கூடாது. இத்தகைய உயரிய அனுபவத்தை எம்.ஆர்.எப் பெற்றுள்ளது என்பதுதான் முக்கியம் என்றும் டயர் வடிவமைப்புக்கு உரிய ஆலோசனைகளை சான்றிதழ் மையம் அளித்துள்ளதாகவும் நிறுவனத்தின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
Leave a Reply