5,000 பேரை பணியில் சேர்க்கிறது விப்ரோ!

17010ஐதராபாத்: முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோ வரும் (2009-2010) நிதியாண்டில் 5000 புதிய பணியாளர்களை வேலைக்கு அமர்த்த உள்ளது. இதற்காக கல்லூரிகளில் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்த முடிவு செய்துள்ளது விப்ரோ.


ஏற்கெனவே 8500 பேரை பணியில் நியமிக்கும் வேலை நடந்து கொண்டிருப்பதாகவும், கூடுதலாக மேலும் 5000 பேர் இப்போது தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் விப்ரோ நிறுவனத்தின் இணை சிஇஓ (ஐடி) கிரிஷ் பரஞ்பே தெரிவித்தார். ‘நாங்கள் ஏற்கெனவே உறுதியளித்தபடி, குறிப்பிட்ட அளவு பணியிடங்களை நிரப்பி வருகிறோம். சொன்னபடி இளைஞர்களுக்கு அதிகளவு வாய்ப்புகளை தருகிறோம். அதுமட்டுமல்ல, பொறியியல் கல்லூரிகளில் மட்டும் வேலைக்கு ஆளெடுக்காமல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பிஎஸ்ஸி போன்ற படிப்புகளை முடித்த இளைஞர்களுக்கு வாய்ப்பு தருகிறோம். குறிப்பாக அறிவிக்கப்படும் பணியிடங்களுக்கு 60 சதவிகிதம் அனுபவமற்ற புதிய இளைஞர்களுக்கே வாய்ப்புத் தருகிறோம்’ என்றார் கிரிஷ் பரஞ்பே. அடுத்த நிதியாண்டில் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்றும், மேலும் கூடுதலான பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *