மதுரை:பெண்ணாகரம் தேர்தலை ஒத்தி வைத்து, அ.தி.மு.க.,வின் உறுப்பினர் போல் தமிழக தலைமை தேர்தல் அலுவலர் நரேஷ் குப்தா செயல்படுகிறார்,” என மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறினார்.மதுரையில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தென் மாவட்ட வளர்ச்சிக்கு ஏற்கனவே அறிவித்த திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும். டிராக்டர் தொழிற்சாலை, கிரானைட் பாலிஷ் ஆலை விரைவில் துவங்க ஏற்பாடு செய்யப்படும்.
வரும் 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 190 முதல் 200 இடங்கள் வரை பெறும். தென் மாவட்டங்களில் 100 அல்லது 95 சதவீத இடங்களை கைப்பற்றும். அ.தி.மு.க., சொல்படி தேர்தல் கமிஷன் கேட்கிறது. தலைமைச் செயலர், உள்துறை செயலரை கலந்து ஆலோசித்த பிறகே, பெண்ணாகரம் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் கமிஷன் அறிவித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசைக் கேட்காமல், தேர்தலை அறிவித்தனர்.
தேர்தல் நடத்தலாம் என, தி.மு.க., காங்., கட்சிகள் சொன்ன பிறகும் இடைத்தேர்தலை தள்ளி வைத்திருக்கின்றனர். அ.தி.மு.க., உறுப்பினர் போல நரேஷ் குப்தா செயல்படு கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. தே.மு.தி.க., தற்போது “தேறாத மு.தி.க.,’ என ஆகிவிட்டது.இவ்வாறு அழகிரி கூறினார்.
Leave a Reply