அனைத்து தோ்தல் வன்முறைகளுக்கும் மகிந்த ராஜபக்ச பொறுப்பு கூற வேண்டும்: சந்திரிக்கா

posted in: உலகம் | 0

chandrika_08அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து தேர்தல் வன்முறைச் சம்பவங்களுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முழுமையாக பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.


நேற்று காலை மேற்கொள்ளப்பட்டக் குண்டுத் தாக்குதலினால் சேதமடைந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் செயலாளர் டிரான் அலஸின் வீட்டைப் பார்வையிடுவதற்கு நேரடியாக சென்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த போதே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

அண்மைக்காலமாக இவ்வாறான வன்முறை சம்பவங்கள் நாட்டிற்குள் அதிகரித்துள்ளன. இவற்றை தடுத்து நிறுத்துவதற்கோ அல்லது சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்து சட்டநடவடிக்கை எடுப்பதற்கோ அரசாங்கத்தால் முடியாதுள்ளது.

இவ்வாறான நிலையில் நாட்டின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமே தவிர மீண்டும் பதவியை பெற்றுத்தருமாறு கோரக்கூடாது எனவும் அவர் கூறினார்.

நான் ஜனாதிபதியாக இருந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுத்தேன். தொடர்புடையவர்களை கண்டறிந்து சட்ட நடவடிக்கைகளை எடுத்தேன். இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை அரசாங்கம் ஒரு போதும் கண்டறிய முற்படப்போவதில்லை என்றார்.

ஜனநாயக விரும்பிகள் எவராலும் இவ்வாறான செயல்களை அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்ட சந்திரிக்கா குமாரதுங்க, தேர்தல் வன்முறைச் சம்பவங்களுக்கு எதிராக ஜனநாயக வழிநடக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *