மதுரை : பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை முன்னதாகவே நடத்தக் கூடாது என அரசு அறிவித்த பின்பும், மதுரையில் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
மாணவர்களின் கல்வியில் பெற்றோர் அதிக ஆர்வம் காட்டுவதை பயன் படுத்தி, பல பள்ளிகள் வணிக ரீதியில் நடத்தப் படுகின்றன. நன்கு படிக்கும் மாணவரை மட்டும் சேர்த்து, 100 சதவீத வெற்றியை காட் டும் பள்ளிகளில் பெற் றோர் கூட்டம் அலை மோதுகிறது. இது போன்ற நர்சரி, மெட்ரிக் பள்ளிகள் பல, சென்னை, கோவை, மதுரையில் செயல்படுகின் றன. அரசு உத்தரவை மீறி, ஜூன் மாதம் துவங்கும் கல்வி ஆண்டுக்கு இப்போதே மாணவர் சேர்க்கை நடத்துகின்றன.
பள்ளிகள் குறித்த ஆய்வு: தமிழகத்தில் பள்ளிகளின் அடிப் படை கட்டமைப்புகள், செயல் பாடுகள் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கோவிந்தராஜன் கமிட்டி முடிவுப்படி, தற்போது பள்ளிகள் குறித்த கணக்கெடுப்பு நடக்கிறது. இக்கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், பள்ளிகளின் வசதியை பொறுத்து ஏ, பி, சி, டி என தரம் பிரித்து, அதற்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப் பட உள்ளது. இந்நிலையில், பள்ளிகள் வணிக ரீதியில் செயல் படுவதை தடுக்க, அரசு கடந்த சில நாட்களுக்கு முன், ஓர் அறிவிப்பை வெளியிட்டது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஏப்ரல், மே மாதங்களில் தான் நடத்த வேண்டும் என்றது. ஆனால், வழக்கம் போல பல பள்ளிகள் ஜனவரியில் விண்ணப்ப வினியோகத்தை துவக்கிவிட்டன. இதற்கான அறிவிப்புகள் பள்ளி வளாகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. அரசு உத்தரவில் இருந்து தப்பிக்கும் வகையில், வசூலிக்கும் கட்டணத்திற்கு ரசீது வழங்குவதில்லை. துண்டுச் சீட்டில் குறித்து கொடுக்கின்றனர். சில பள்ளிகள் முதற் கட்டமாக 80 சதவீத பணத்தை மட்டும் பெற் றுக் கொள்கின்றன.
சென் னையில், சில பள்ளிகளில் தனி ரசீது புத்தகம் அச் சிட்டு, வசூலில் ஈடுபடுவதாகவும், சில பள்ளிகள் அரசு உத்தரவிற்கு முன்தேதியிட்டு, ரசீது வழங்குவதாகவும் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. வரும் கல்வி ஆண்டு முதல் சமச்சீர் கல்வி அமலாக்கப்பட உள்ளது. நர்சரி, மெட்ரிக் பள்ளிகளிலும் மாநில அரசின் பாடத்திட்டமே செயல்படுத்தப்பட உள்ளதால், மாணவர் சேர்க்கையும் வருமானமும் குறையலாம் என மெட்ரிக் பள்ளிகள் கருதுகின்றன. இது குறித்து பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது: இப்போது விண்ணப் பங்களை வினியோகித்தாலும், மாணவர் சேர்க்கை ஏப்ரல், மே மாதத்தில் தான் நடக்கும். பெற்றோர் ஆர்வம் காட்டுவதால் இதை தவிர்க்க முடியாது. இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.
Leave a Reply