சென்னை: அ .தி.மு.க., மாநில பொறுப்பாளர்கள் நியமனம் செய்து ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இவரது புதிய ஆணையில் நிர்வாகிகள் பெரியஅளவில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. பொறுப்புகள் மாற்றப்பட்டிருப்பது மட்டுமே நடந்துள்ளது. யாரும் தூக்கி வீசப்படவில்லை. யாரும் புதிதாக தூக்கி வைக்கப்படவுமில்லை. இதனால் நிர்வாகிகள் மத்தியில் பெரும் சஞ்சலம் ஏதும் இல்லாமல் புதிய நியமனம் முடிந்தது.
ஜெ., வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி புதிய நிர்வாகிகள் விவரம் வருமாறு: அ.தி,மு,க., பொதுசெயலர் ஜெயலலிதாவே நீடிப்பார். மற்ற நிர்வாகிகள் விவரம் வருமாறு: மதுசூதனன் ( அவைத்தலைவர்) , ஓ. பி.பன்னீர்செல்வம் ( பொருளாளர்) , கே. ஏ.செங்கோட்டையன் ( தலைமை நிலைய செயலர் ), டி. ஜெயக்குமார் ( எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் ), தம்பித்துரை ( கொள்கை பரப்பு செயலர்) , பி.எச்.,பாண்டியன் ( அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் ) நயினார் நாகேந்திரன் ( ஜெ., பேரவை செயலர்) , ஆதிராஜாராம் ( எம்.ஜி.ஆர்., மன்ற மாநில இளைஞரணி செயலர் ) உதயக்குமார் ( மாணவரணி), கோகுல இந்திராணி ( மாநில மகளிரணி செயலர் ) மைத்தேரயன் ( மருத்துவ அணி தலைவர்), வேணுகோபால் ( மருத்துவ அணி செயலர்) . பொள்ளாச்சி ஜெயராமன் ( தேர்தல் பிரிவு செயலர்),
கழக அமைப்பு செயலர்கள் : பொன்னையன், விசாலாட்சி நெடுஞ்செழியன் , முத்துச்சாமி , வளர்மதி , கருப்பசாமி , சுலோக்சனா சம்பத் , தளவாய் சுந்தரம் , செம்மலை ஆகியோர் அடங்குவர் .
சிறுபான்மை பிரிவு செயலர் : அன்வர்ராஜா (சிறுபான்மை பிரிவு செயலர் ), மனோஜ்பாண்டியன்( வக்கீல் அணி செயலர் ), வைகை செல்வன் ( இலக்கிய அணி செயலர் ) , பழக்கருப்பபையா ( (இலக்கிய அணி தலைவர் ), கே.கே. கலைமணி ( மீனவர் பிரிவு செயலர் ), ஜெனிபர் சந்திரன் ( மீனவர் இளைஞரணி செயலர்), டாக்டர் , வெங்கடேஷ் ( இளைஞர் பாசறை ) .கமலக்கண்ணன ( அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலர்) .
அ.தி.மு.க., மாவட்ட கட்சியின் பொறுப்பாளர்கள்: மதுசூதனன் ( வட சென்னை), செங்கோட்டையன் ( ஈரோ) , தம்பித்துரை ( கிருஷ்ணகிரி ), தளவாய் சுந்தரம் ( கன்னியாகுமரி ), நயினார் நாகேந்திரன் ( நெல்லை மாநகர் ) , கருப்பச்சாமி ( நெல்லை புறநகர் ) , அன்வர் ராஜா (ராமநாதபுரம் ) , ஜெனிபர் சந்திரன் ( தூத்துக்குடி),
Leave a Reply