புதுடெல்லி: டிவி, ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களின் விலையை 5 சதவீதம் வரை உயர்த்த எல்ஜி, கோத்ரெஜ், வீடியோகான், வேர்ல்பூல் ஆகிய முன்னணி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
எலக்ட்ரானிக் சாதனங்களுக்கான மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் முக்கிய பங்கு வகிக்கும் ஸ்டீல் இந்த மாதத்தில் மட்டும் டன்னுக்கு ரூ.2,000 அதிகரித்துள்ளது. இது ஓராண்டுக்கு முன் இருந்ததைவிட 8 சதவீதம் அதிகம். தவிர, காப்பர் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றின் விலையும் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.
மேலும் பல மாநில அரசுகள் நுகர்பொருட்கள் மீதான மதிப்புக்கூட்டு (வாட்) வரியை உயர்த்தி உள்ளன. இதனால் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, மிக்சி உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களின் விலையை 5 சதவீதம் வரை உயர்த்த அதன் உற்பத்தியாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
ÔÔமூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், எலக்ட்ரானிக் சாதனங்களின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இது 2 முதல் 5 சதவீதம் வரை இருக்கும்ÕÕ என எலக்ட்ரானிக் நுகர்வு பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சுரேஷ் கண்ணா தெரிவித்தார்.
Leave a Reply