புதுடில்லி: இந்தியாவில் கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 52 கோடியை தாண்டி உள்ளது.
2009ம் ஆண்டு நவம்பரில் 1.76 கோடியாக செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. இந்நிலையில், அதற்கு அடுத்த டிசம்பர் மாதத்தில் 1.91 கோடி அதிகரித்து 52 கோடியை தாண்டி உள்ளது.
செல்போன் இணைப்பில் முதலிடத்தில் உள்ள பார்தி ஏர்டெல் சென்ற டிசம்பரில் 28.50 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 11.80 கோடியாக தற்போது உள்ளது. இதே போல ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சென்ற டிசம்பரில் 28 லட்சம் புதிய வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் 16 லட்சம் வாடிக்கையாளர்களையும், யூனிநார் நிறுவனம் 12 லட்சம் வாடிக்கையாளர்களையும் சென்ற டிசம்பரில் இணைந்து கொண்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
Leave a Reply