மும்பை:”விவாகரத்து செய்த மனைவிக்கு, அவரது கணவர், ஜீவனாம்சம் தொகை வழங்கத் தவறிய ஒவ்வொரு மாதமும் சிறை தண்டனை அனுபவிக்க வேண் டும்’ என, மும்பை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.மகாராஷ்டிரா மும்பையை சேர்ந்தவர் ஷியாம் பாட்டீல்;
இவர் தன் மனைவி சீமாவை விவாகரத்து செய்து விட்டார். எனவே, ஷியாம் பாட்டீல், சீமாவிற்கு மாதம் 1,000 ரூபாய் ஜீவனாம்ச தொகை வழங்க குடும்ப நலக் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. பின், மாதம் 1,500 ரூபாய் ஜீவனாம்ச தொகை வழங்க கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், ஷியாம் பாட்டீல், சீமாவிற்கு 2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஜீவனாம்ச தொகை வழங்கவில்லை.எனவே, இது தொடர்பாக, சீமா குடும்ப நலக் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த குடும்ப நலக் கோர்ட், ஷியாம் பாட்டீல் 44 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் அல்லது கொடுக்க வேண்டிய ஜீவனாம்ச தொகை 50 ஆயிரத்தை, ஒரே தவணையில் கொடுக்க வேண்டும் என, தீர்ப்பு வழங்கியது.இதை எதிர்த்து, தனக்கு வழங்கப்பட்ட தண்டனை காலத் தை குறைக்க கோரி, ஷியாம் பாட்டீல் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட் நீதிபதி ரோஷன் தால்வி கூறியதாவது:கோர்ட் தீர்ப்பை கணவர் மதிக்காத போது, அவரது மனைவி எத்தகைய துன்பங் களை எதிர்கொள்கிறார் என்பதை இவ்வழக்கு எடுத்துக் காட்டுகிறது. இந்த வழக்கில் கணவர், உறுதியாகவும், பிடிவாதமாகவும், ஜீவனாம்ச தொகை கொடுக்க தவறி உள்ளார்.குடும்ப நலக் கோர்ட் நீதிபதி தன் அதிகாரத்தை பயன்படுத்தி, தண்டனை வழங்கும் காலத்தை நிர்ணயிக்கலாம். எனவே, ஷியாம் பாட்டீலின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்றார்.
Leave a Reply