நமது தமிழ் மக்களின் விடுதலைக்காக தார்மீக வழியில் போராடினார் தந்தை செல்வா அவர்கள். பல ஆண்டு காலமாக பயனேதும் கிடையாது போகவே கடவுளால்தான் எம்மைக் காப்பாற்ற முடியும் என்று கூறினார் அவர். அந்தக் கடவுளாக வந்தவர்தான் நமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசின் கனடிய பிரிவின் தலைவர் ராம் சிவலிங்கம் கனடா உதயனுக்கு தெரிவித்துள்ளார்.
இலங்கை இந்தியா சம்பந்தப்பட்ட ஒரு விடயமாக இருந்த நமது பிரச்சனையை உலகளாவிய விடயமாக மாற்றியவர் நமது தேசியத் தலைவர் பிரபாகரனே ஆவார்”
நமது தமிழ் மக்களின் விடுதலைக்காக தார்மீக வழியில் போராடினார் தந்தை செல்வா அவர்கள். பல ஆண்டு காலமாக பயனேதும் கிடையாது போகவே கடவுளால்தான் எம்மைக் காப்பாற்ற முடியும் என்று கூறினார் அவர். அந்தக் கடவுளாக வந்தவர்தான் நமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள்.
தம்பி பிரபாகரன் அவர்கள் போர்க்களத்திற்கு ஒரு அர்த்தத்தையும் போருக்கு ஒரு வரைவிலக்கணத்தையும் கொடுக்கும் அளவிற்கு தமிழனின் வீரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் உலகமே வியக்கும் அளவிற்கு தனது செயலால் அனைவரையும் ஈர்த்தார். மாவீரர்களின் மனவலிமையையும் மக்களின் மன உறுதியையும் காட்டி மாற்றானையே மந்தமடைய வைத்தவர்தான் நமது தலைவர். ஏ
ஏறக்குறைய 35 ஆண்டுகளாக முடி சூடா மன்னராக இருந்து தனது பங்களிப்பை முழுமையாகச் செய்துவிட்டு 2008 ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரையில் “இனிமேல் இந்தப் போராட்டத்தை புலம்பெயர்ந்த தமிழர்களின் கையில் கொடுக்கின்றேன். அவர்கள்தான் இனிமேல் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று உறுதியாகக் கூறி எம்மிடம் ஒப்படைத்தார். அதை நாம் நமது பணிகளில் மிக முக்கியமானதாக கருதி நாம் எல்லோரும் சேர்ந்து இயங்கி வெற்றி பெறவேண்டும”
இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசின் கனடாப் பிரிவின் தலைவரும் பொறியியலாளருமான கலாநிதி ராம் சிவலிங்கம் கனடா உதயன் அலுவலக செய்தியாளருக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் தெரிவித்தார். ஸ்காபுறோவில் உள்ள அலுவலகம் ஒன்றில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
கலாநிதி ராம் சிவலிங்கம் மேலும் தெரிவிக்கையில்
“ இலங்கை இந்தியா ஆகிய இருநாடுகள் சம்பந்தப்பட்ட விடயமாக இருந்த நமது விடுதலைப் போராட்டத்தை உலகளாவிய ஒரு விடயமாக மாற்றி அதன் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்து அதன் மீதிப்
பணியை புலம் பெயர்ந்து வாழும் நமது மக்களிடம் கையளித்தார் நமது தலைவர்.
சட்டத்தரணி விசுவநாதன் உருத்திரகுமார் அவர்கள் இந்த தானைத் தலைவனின் வேண்டுதலை ஏற்று தனது பணியென கருதி மனித உரிமை தொடர்பான விடயங்களின் உலகப் புகழ்பெற்ற சட்டத்தரணியான
திருமதி கரன் பார்க்கர் மற்றும் உலகப்புகழ்பெற்ற சட்டப் பேராசிரியர் பிரான்சிஸ் போயில் என்பவர்களின் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் இயங்கி வருகின்றார். என்னைப் போலவே தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் ஒவ்வொரு தலைவரையும் பொறுப்பாளர்களையும் நியமித்து தனது பணிகளை பன்முகப்படுத்தி வருகின்றார்.
நாடு கடந்த தமிழீழ அரசு என்ற பெயரில் இயங்கி வரும் இந்த அமைப்பு பல விதமான சர்வதேச சட்டங்களுக்கும் நிபந்தனைகளுக்கும் அமையவே இயங்கி வருகின்றது. எமது நோக்கத்தை தமிழரின் அபிலாசைகளை அடைவதற்கான இறுதிப் பயணம் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதை நாம் நமது உறுதி மூச்சாக எடுத்துக் கொள்ளவேண்டும். ஈழத்தமிழர்களின் வெற்றிக் கொடியை நாட்டப் போகும் இறுதி யாத்திரை இதுவாகும். முள்கம்பிகளுக்குள் முடங்கி வாழும் நமது இனத்தின் விடிவு நோக்கி செல்லும் ஓர் வாகனம் இதுவாகும். இவ்வாறு மிக முக்கிய நோக்கங்களை கொண்டு நாம் இயங்க வேண்டிய அமைப்பே நாடு கடந்த தமிழீழ அரசாகும்.
எமது இந்த இறுதிப் பயணத்தை வெற்றிகரமாக முடிக்க புலம் பெயர்வாழ் தமிழர்கள் ஒவ்வொருவரும் தம்மாலான பங்கை செய்ய வேண்டும். இது ஒவ்வொருவரின் கடமையும் உரிமையும் ஆகும்.. இதன் வெற்றியின் மெருகும் அடையும் காலமும் உங்கள் கையில் தான் தங்கியுள்ளது.
உலகில் நமது தமிழ் மக்களின் தற்போதைய அரசியல் தேவையை போல நாடு கடந்த அரசு அமைப்பது என்பது உலகம் அறிந்த விடயம் . ஆனால் ஏனைய இனத்தவர்களுக்கு இல்லாத நன்மைகள் பல நமக்கு உள்ளன. அதில் ஒன்றுதான் உலகெங்கும் பரந்து வாழும் நமது இனத்தின் பலம் ஆகும். அதன் அடிப்படையில் தான் நமது வேண்டுகோள் உலகநாடுகளிடம் விடுக்கப்படுகின்றபோது எமக்கு சாதகமாக அமையும்.
எமது செயற்பாடுகளில் முதற் கட்டமாக விரைவில்
நடக்கப்போவது தான் தமிழீழ அரசிற்கான அவையின் தேர்தல் ஆகும். உலகெங்கும் 135 அங்கத்தவர்களைக் கொண்ட தமிழீழ அரசு அவைக்கான தேர்தலில் கனடாவிற்கான 25 அங்கத்தவர்களை நாம் தெரிவு செய்ய வேண்டும். இதில் மக்களின் பங்களிப்பும் ஆலோசனையும் மிக அவசியம். அத்தோடு ஊடகங்களின் பங்களிப்பும் மிக மிக அவசியமாகும். ஊடகங்களின் மூலமாகத்தான் நாம் நமது மக்களுக்கு நமது கருத்துக்களையும் தேவைகளை எடுத்துச் செல்ல முடியும். எனவே ஊடகங்கள் நம்மோடு சேர்ந்து தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். மேலும் ஊர்ச் சங்கங்கள் மற்றும் விளையாட்டுச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் போன்றவையும் நமக்கு ஆதரவு தரவேண்டும்.
அத்துடன் இந்தப் பணியை செவ்வனே செய்வற்கு நமக்கு தொண்டர்கள் அதிகளவில் தேவைப் படுகின்;றார்கள். எம்முடன் தொடர்பு கொண்டு தொண்டர்களாக இணைந்து கொள்ள விரும்புகின்றவர்கள் தங்கள் பங்களிப்;பைச் செய்யலாம்.
நமது நாடு கடந்த தமிழீழ அரசின் அவைக்கான அங்கத்தவர்களை தெரிவு செய்யும் போது அவர்களது ஆற்றல் மற்றும் அனுபவம் ஆகியனவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் நாம் வேண்டிக் கொள்கின்றேன். அவர்களின் திறமையில்தான் நமது வெற்றியின் காலமும் அதன் தரமும் தங்கியுள்ளது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. “ என்றார் கலாநிதி ராம் சிவலிங்கம்
கனடா உதயன்
Leave a Reply