புறம்போக்கு நிலத்தில் குடியிருந்தால் பட்டா

posted in: அரசியல் | 0

na509சென்னை : அரசு புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி 3 ஆண்டுகள் குடியிருந்தால் போதும். அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும்’’ என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.


தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி 10 ஆண்டுக்கு மேல் குடியிருப்போருக்கு, அவர்களுடைய ஆக்கிரமிப்புகளை வரன்முறை செய்து, வீட்டுமனை வழங்கும் சிறப்பு திட்டம் திமுக அரசால் 2006ல் செயல்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தில் காலவரையறை 10 ஆண்டுகள் என்பது 5 ஆண்டுகளாக பின்னர் குறைக்கப்பட்டது. திட்டத்தின் கீழ் வீட்டுமனை பட்டா பெறுவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த வருமான உச்சவரம்பு முற்றிலும் நீக்கப்பட்டது.
இதன் பயனாக கடந்த மூன்றரை ஆண்டுகளில் 6 லட்சத்து 99 ஆயிரத்து 917 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் மேலும் பல்லாயிரக் கணக்கான ஏழை மக்கள் பட்டா பெற்று பயன்பெற, குறைந்தபட்ச குடியிருப்பு கால வரம்பு 3 ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று 6ம் தேதி சட்டப்பேரவையில் நிகழ்ந்த கவர்னர் உரையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி அரசு நிலங்களில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருப்போர் 5 ஆண்டுகளாவது குடியிருந்திருக்க வேண்டும் என்பதை, 3 ஆண்டுகள் குடியிருந்தால் போதும் என்று மேலும் குறைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
முதல்வரின் இந்த அறிவிப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய மக்கள் வீட்டுமனை பட்டா பெறும் அரிய வாய்ப்பு உருவாகி உள்ளது. இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *