புதுடெல்லி: ‘முறையான நடைமுறைகளை பின்பற்றி பணி நியமனம் செய்யப்படாதவர்கள், தங்களை நிரந்தரம் செய்யும்படி கேட்க உரிமை கிடையாது’ என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
கர்நாடகாவில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்கள், வாட்ச்மேன், வயர்லெஸ் ஆபரேட்டர்கள், உதவியாளர்கள் போன்றவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி அரசுக்கு உத்தரவிடும்படி கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதை விசாரித்த தீர்ப்பாயம், அவர்களை பணி நிரந்தம் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், கர்நாடக அரசு இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் தது. உயர் நீதிமன்றமும் தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.
நீதிபதிகள் சிர்புர்கர், முகுந்தகம் சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசா ரித்து அளித்த தீர்ப்பில், ‘உயர் அதிகாரிகள் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி இதுபோன்ற தொழிலாளர்களை தற்காலிக ஊழியர்களாக நியமிக்கின்றனர். நியமன நடைமு றைகளை மீறி அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் செய்யும் இதுபோன்ற நியமனங்களில் ஊழல் பிறக்கிறது. வேலைவாய்ப்பு விதிமுறைகளை மீறிய இந்த செயலால், முறையாக பதிவு செய்து விட்டு காத்திருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, முறையான நடைமுறைகளை பின்பற்றாமல் நியமிக்கப்படும் ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்யும்படி கோர உரிமை கிடையாது’ என்று தெரிவித்தது.
இருப்பினும், தொழில்துறை தகராறு சட்டம் 1947ன்படி இந்த பிரச்னையில் தங்களுக்கு ஏதாவது நிவாரணம் கிடைக்கும் என்று சம்பந்தப்பட்ட ஊழியர்கள் கருதினால், அதற்கான தகுந்த துறைகளை நாடலாம் என்ற நீதிபதிகள் வாய்ப்பு அளித்தனர்.
Leave a Reply