பாலசூர்:அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கவல்ல, “அக்னி-3′ ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை, 3,500 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்கை தாக்கவல்லது.
உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரான இந்த ஏவுகணை, தரையில் ஒரு இடத்தில் இருந்து புறப் பட்டு, மற்றொரு இடத் தில் உள்ள இலக்கை தாக்கவல்லது.ஒரிசாவின் பாலசூரில் உள்ள வீலர் ஐலண்ட் தமரா என்ற இடத்தில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலம் செலுத்தப்பட்டது.
இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக, பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. “அக்னி-3′ வரிசையில் இது நான்காவது ஏவுகணை சோதனை.இந்த ஏவுகணையானது 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும், 50 டன் எடையும் கொண்டது. நேர்த்தியான வகையில் தோன்றும் இந்த ஏவுகணை, கம்ப்யூட்டர் முறைகளுடன் கூடிய நவீன தொழில் நுட்பம் மற்றும் கட்டுப்பாட்டு முறைகளைக் கொண்டது.”அக்னி-3′ ஏவுகணை முதன் முறையாக 2006 ஜூலை 9ம் தேதி சோதனை செய்யப் பட்டது. அதன்பின் 2007 ஏப்ரல் 12 மற்றும் 2008 மே 7 ஆகிய தேதிகளில் பரிசோதிக்கப்பட்ட
Leave a Reply