அமெரிக்க ராணுவத்துக்கு ஆள் எடுப்பு? சென்னையில் திரண்டது இளைஞர் பட்டாளம்

posted in: மற்றவை | 0

11america நேர்காணல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு.


சென்னை, ​​ ஜன.​ 10: அமெரிக்க ராணுவத்துக்கு உதவும் வகையில் ஓட்டுநர்கள் ​உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆள்களைத் தேர்வு செய்ய சென்னையில் புதன்கிழமை நேர்காணல் நடைபெற்றது.​ இதில் பங்கேற்க நூற்றுக் கணக்கான இளைஞர்கள் திரண்டனர்.

​ இதனால் ஏற்பட்ட நெரிசலை சமாளிக்க முடியாததால்,​​ மறுதேதி அறிவிக்கப்படாமல் நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது.​ அரசு மற்றும் போலீஸாரின் அனுமதியின்றி இந்த நேர்காணல் நடத்தப்பட்டதாக அறிந்ததால் நேர்காணலை ஒத்திவைக்க போலீஸார் உத்தரவிட்டனர்.

​ ஆப்கானிஸ்தான்,​​ இராக் மற்றும் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் பல்வேறு இடங்களில் அமெரிக்க ராணுவத்தினர் முகாமிட்டுள்ளனர்.

​ தலிபான்கள்,​​ அல்}கொய்தா உள்ளிட்ட சர்வதேச தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு எதிராக அமெரிக்கா பல்வேறு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

​ அமெரிக்க கூட்டுப் படையினரின் விமானங்கள்,​​ ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்காக சரக்கு கிடங்குகள் உள்ளிட்ட வசதிகளுடன் தாற்காலிக விமான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.​ இவை தவிர ஏராளமான இடங்களில் ராணுவ வீரர்கள் தங்குவதற்கு மிகப் பெரிய முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.

​ இந்த முகாம்களுக்கு உணவு,​​ மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களும்,​​ ராணுவத் தளவாடங்களும் பெருமளவு அமெரிக்காவில் இருந்து விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் அனுப்பப்படுகின்றன.​ இந்தச் சரக்குகளை கையாளுவதற்கு பல்லாயிரக்கணக்கான பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.

இதற்காக இந்தியா,​​ இலங்கை,​​ பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளில் முகவர்கள் மூலம் ஆள்களைத் தேர்வு செய்யும் பணி இப்போது தீவிரமாக நடைபெறுகிறது.

​ லட்சக் கணக்கில் ஊதியம்:​​ விமான நிலையங்களில் சரகக்குகளை கையாளுவோர்,​​ சரக்கு கிடங்கு மற்றும் எரிபொருள் பராமரிப்பாளர்ஆகிய பணியிடங்களில் சேர உடல் திறன்,​​ கணினி அறிவுடன் கூடிய முன்னாள் ராணுவத்தினரும் விண்ணப்பிக்கலாம்.

இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.​ 1.91 லட்சம் ​(4,064 டாலர்கள்)​ வரை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.​ டயர் பராமரிப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பப் பணியிடங்களுக்கு மாத ஊதியமாக ரூ.​ 54 ஆயிரம் வரை ​

நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

​ பஸ்,​​ லாரி,​​ டிரக் ஓட்டுநர்கள்,​​ கிரேன் ஆபரேட்டர்கள்,டெய்லர்,​​ சமையல்காரர்,​​ பேக்கர்ஸ்,​​ சலவைப் பணியாளர்கள்,​​ ஐஸ் கிரீம் தயாரிப்போர் உள்ளிட்ட 70 வேலை இடங்களுக்கு ஆள்களை தேர்வு செய்ய மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சார்பில் விளம்பரம் செய்யப்பட்டது.

“வளைகுடா நாடுகள்}​ அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு ஆள்கள் இலவச நியமனம்’ என்ற தலைப்பில் இந்த விளம்பரம் இருந்தது.

சலுகைகள் தாராளம்…குறைந்தபட்சம் 3 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவத்துடன்,​​ ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.​ ஆண்டுதோறும் விடுமுறையில் தங்களது தாயகத்துக்கு சென்று திரும்ப இலவச விமான டிக்கெட் வசதி உள்ளிட்ட பல சலுகைகள் அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.

​ இதையடுத்து கன்னியாகுமரி முதல் கரூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும்,​​ ஆந்திரம்,​​ கர்நாடகம்,​​ கேரளம்,​​ புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ​

ஏராளமானோர் நேரிலும்,​​ ஆன்லைன் முறையிலும் விண்ணப்பித்தனர்.

​ இதற்கான நேர் காணல் சென்னை ராயப்பேட்டை தபால் நிலையம் அருகே நல்லண்ண முதலி தெருவில் உள்ள கட்டடத்தில் பிப்ரவரி 10,​ 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் என கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.​​ இதையடுத்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டனர்.​ சிலர் துபை,​​ அபுதாபி உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் வந்திருந்தனர்.

போலீஸ் தடியடி:​​ இதனால் நேர்காணல் நடந்த குறுகலான பகுதியில் அதிகாலை 4 மணி முதல் நெரிசல் அதிகரித்தது.​ ஆனால்,​​ நேர்காணல் நடத்திய நிறுவனத்தின் நிர்வாகிகள் செய்வதறியாமல் திகைத்தனர்.

​ பிற்பகல் 1 மணியளவில் அலுவலகத்துக்குள் ஒரு கும்பல் புகுந்தது.​ இதையடுத்து கூச்சல் குழப்பம் நிலவியது.​ உடனே ராயப்பேட்டை போலீஸார் வந்து கும்பலைக் கலைக்க தடியடி நடத்தினர்.​ அனுமதியின்றி நேர்காணல் நடத்தப்பட்டதால் நிர்வாகிகளை போலீஸார் எச்சரித்து நேர்காணலை ஒத்திவைக்க செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *