துபை, பிப். 22: இந்திய தேயிலைக்கு துபையில் தொடர்ந்து கிராக்கி நிலவுகிறது. இந்தியாவிலிருந்து தேயிலை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் துபை இரண்டாவது இடத்தில் உள்ளது.
இது குறித்து துபை தேயிலை வணிக நிறுவனம் மேலும் கூறியிருப்பது:
துபை மக்கள் அதிகம் விரும்பும் தேயிலையில் இலங்கைக்கு அடுத்தபடியாக இந்திய தேயிலை உள்ளது.
இலங்கை, இந்தியா, கென்யா ஆகிய நாடுகளில் இருந்துதான் துபைக்கு அதிக அளவில் தேயிலை இறக்குமதி செய்யப்படுகிறது. மொத்த இறக்குமதியில் இந்த நாடுகளின் பங்களிப்பு 65 சதவீதமாக உள்ளது.
எங்கள் நிறுவனம் மூலம் சாதனை அளவாக 2009-ம் ஆண்டில் 75 லட்சம் கிலோ தேயிலையை விற்பனை செய்துள்ளோம். இந்திய தேயிலை ஒரு கிலோ சுமார் ரூ. 150-க்கு ஏலம் போனது. இது கடந்த ஆண்டு விலையை விட 12.4 சதவீதம் அதிகமாகும்.
Leave a Reply