புதுடில்லி:ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன, என வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இது குறித்து குறிப்பிடுகையில், ” கடந்த 2007ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த தாக்குதல் அதிகரித்தது.
இது குறித்து மத்திய அரசு, ஆஸ்திரேலியாவுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வற்புறுத்தியது.ஆஸ்திரேலிய அரசும், குறிப்பாக விக்டோரியா மாநில அரசும், நமது வேண்டுகோளை ஏற்று இந்தியர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதன் பேரில், சமீபத்தில் இந்தியர்கள் மீதான தாக்குதல் குறைந்துள்ளது’ என்றார்.
Leave a Reply