மெல்போர்ன்: இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவற்காக, தன்னை சிலர் தாக்கி எரிக்க முயன்றதாக கூறி நாடகமாடியுள்ளார் ஜஸ்பிரீத் சிங் என ஆஸ்திரேலிய போலீஸார் கூறியுள்ளனர்.
மெல்போர்ன் நகரின் வடக்கில் உள்ள எஸ்ஸன்டன், கிரிஸ் கிரசென்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஜஸ்பிரீத் சிங். இவர் சமீபத்தில் சிலர் தன்னை வீட்டின் முன்பு காரை பார்க் செய்து கொண்டிருந்தபோது தாக்கி, பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றதாக கூறினார்.
இதனால் இது இனவெறித் தாக்குதலாக கருதப்பட்டது. ஆனால் இது இனவெறித் தாக்குதல் அல்ல, மாறாக யாரும் இவரைத் தாக்கவில்லை. இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவற்காக தனக்குத் தானே பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொண்டுள்ளார் சிங் என்று ஆஸ்திரேலிய போலீஸார் கூறியுள்ளனர்.
தற்போது இவர் மீது பொய்யான புகார் கொடுத்ததாக போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து ஜாமீன் கோரியுள்ளார் ஜஸ்பிரீத் சிங்.
தனது மனைவியின் மாணவர் விசா மூலம் ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ளார் ஜஸ்பிரீத் சிங் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Read: In English
15 சதவீத தீக்காயத்துடன் ஆல்பிரட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார் சிங். அவரது முகம், கை, தோள்பட்டை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply