இன வெறி : ஆஸி., அமைச்சர் வெளிப்படை

posted in: உலகம் | 0

tblfpnnews_89173090458சிட்னி: ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் இன வெறி காரணமாகத்தான் நடந்திருக்கிறது என அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஸ்டீபன் ஸ்மீத் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பார்லிமென்டில் கூறுகையில்: நமது நாட்டில் இந்தியர் மற்றும் சில பிரிவினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நமது நாட்டிற்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாதிப்பு குறித்து நாங்கள் நன்றாக உணர்ந்திருக்கிறோம் . சமீபத்தில் நடந்த தாக்குதலில் சில இன ரீதியாக நடத்தப் பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட இந்தியர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த கவலையை தெரிவித்து கொள்கிறேன்.

இந்தியர்கள் மீதான தாக்குதல் கல்வி தொடர்பான பாதிப்பை மட்டும் ஏற்படுத்தவில்லை. இரு நாட்டு நல்லுறவையும் கடுமையாக பாதித்துள்ளது. இது தொடர்பாக இந்தியா தரப்பில் இருந்தும் தெற்காசியாவில் இருந்தும் ஆஸி.,க்கு எதிரான கண்டனம் எழுந்தது. குறிப்பாக பஞ்சாபை சேர்ந்த நிதீன்கர்க் கொலையான சம்பவத்தால் தேவயில்லாத பரபரப்பு தொற்றியது. டில்லிக்கும், கான்ப‌ராவுக்கும் இடையே பெரும் கசப்பை ஏற்படுத்தியது. டில்லியில் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பு வந்தது. தாக்குதல் மட்டுமல்லாமல் கொள்ளையும் சேர்த்து நடத்தப்பட்டுள்ளது. இதனை கண்டு பிடித்து அவருக்கு மன்னிக்க முடியாத குற்றம் புரிந்தற்கான தண்டனை வழங்கப்படும். ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஏன் என்ற காரணத்தை கண்டறியப்படும். இனி வரும் காலங்களில் இது போன்ற தாக்குதல் நடக்காத வண்ணம் போலீசார் கவனித்து கொள்ள வேண்டும். சர்வதே அளவில் இந்திய ஆஸ்திரேலியாவுடன் நட்பு ரீதியாக முதலிடத்தில் இருக்கிறது.

ஆஸி.,யில் 4. 5 லட்சம் இந்தியர்கள் : நமது நாட்டில் 4 லட்சத்து 50 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கின்றனர். இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் மாணவர்கள் ஆவர். இவர்களது பாதுகாப்பு நமது நாட்டின் முக்கிய க‌டமைகளில் ஒன்று. இன ரீதியான தாக்குதலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் இவ்வாறு கூறினார்.

இன வெறி தொடர்பாக ஆஸ்திரேலிய வெளியுறவு துறை அமைச்சர் வெளிப்படையாக பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *