எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் அரசியல் பயணம் தொடரும்: சரத் பொன்சேகா

posted in: உலகம் | 0

sarath_21எவ்வாறான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும் தமது அரசியல் பயணம் தொடரும் என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் அரசாங்கம் இனவாதத்தை தூண்டும் வகையிலான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டை சொலியஸ் மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

தமது காரியாலயத்தில் கடமையாற்றி அனைவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவிதமான சூழ்ச்சித் திட்டத்தையும் தாம் மேற்கொள்ளவில்லை எனவும், மக்களின் ஜனாதிபதி தாமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *