கோலாலம்பூர்:மலேசிய, “ஹின்ட்ராப்’ தலைவர்களில் ஒருவரான மனோகரன், அவரது மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என, மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள இந்திய வம்சாவழி இந்தியர்களுக்கு சம உரிமை கொடுக்கப்படுவதில்லை எனக் கூறி, 2007ம் ஆண்டு இந்து உரிமை போராட்டக் குழுவினர் (ஹின்ட்ராப்), கோலாலம்பூரில் போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது.
இந்த அமைப்பைச் சேர்ந்த வேதமூர்த்தி, கணபதி ராவ், மனோகரன் உள்ளிட்ட ஐந்து பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டனர்.மலேசிய பொதுத்தேர்தலில் சிறையில் இருந்த படியே போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மனோகரன். இவர், சிறையில் இருந்த போது இவருக்காக இவரது மனைவி பிரசாரம் செய்தார்.
இதற்கிடையே மனோகரனை சிலர் மிரட்டி வருகின்றனர். உன் மனைவியை ஏழு நாட்களுக்குள் விவாகரத்து செய்யாவிட்டால், அடையாளம் தெரியாத நபருடன் உன் மனைவி உறவு கொள்ளும் படத்தை இன்டர்நெட்டில் வெளியிடுவோம்’ என, மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மனோகரன், போலீசில் புகார் செய்துள்ளார்.
Leave a Reply