கடந்த ஆண்டு தொழில்துறை உற்பத்தி 16.8% அதிகரிப்பு

5071027புதுடில்லி : தொழில் துறை உற்பத்தி 2009, டிசம்பர் மாதத்தில் 16.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் நுகர்வோர் பொருட்களின் உற்பத்தி அதிகரித்ததே ஆகும்(சென்ற ஆண்டு டிசம்பரில் 0.2%).

தொழில் துறை உற்பத்தி கணக்கீட்டு அட்டவணையில் உற்பத்தி பிரிவின் பங்கு 80 சதவீதமாக உள்ளது. இந்த டிசம்பர் மாதத்தில் உற்பத்தி பிரிவு 18.5 சதவீதமாக அதிகரித்துள்ளது (சென்ற ஆண்டு டிசம்பரில் 0.6%).

நுகர்வோர் பொருட்களின் பிரிவு 46 சதவீதமாக அதிகரித்துள்ளது(சென்ற வருடம் டிசம்பர் 4.2%). இந்த நிதி ஆண்டின் முதல் 9 மாதங்களில்(2009 ஏப்ரல் முதல் 2009 டிசம்பர் வரை) தொழில் துறை உற்பத்தி 8.6 சதவீதமாக உள்ளது. சென்ற நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் 3.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *