ராமநாதபுரம் : சேது சமுத்திர திட்டம் மீண்டும் துவங்கவுள்ள நிலையில், அதற்கான ஆய்வுப் பணிகளுக்கான ஆராய்ச்சியாளர்கள் குழு வருகை குறித்த விவரம் தெரிவிக்கப்படாமல் உள்ளது.
பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ராமர் பாலம், சுப்ரீம் கோர்ட்டின் விசாரணைக்கு சென்றது. யார் மனதையும் புண்படுத்தாமல், மாற்றுப் பாதையில் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய அரசுக்கு கோர்ட் வலியுறுத்தியது. இதற்காக அமைக்கப்பட்ட கமிட்டியும், மாற்றுப் பாதை ஆய்வுப் பணியில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இது குறித்து, “தினமலர்’ தொடர்ந்து செய்தி வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து மாற்றுப் பாதை ஆய்வுகளைத் துவங்கி, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு மும்முரமாக களம் இறங்கியது. இதற்காக அரிச்சல் முனை, தனுஷ்கோடி, கோபாலபட்டினம், வேதாரண்யம், திருச்செந்தூரில் நீரோட்டமானி, அலைமானி கருவிகள் பொருத்தப்பட உள்ளன. பொருத்தப்படும் கருவிகளுக்கு பாதுகாப்பு, திட்டத்துக்கு ஒத்துழைப்பு தருமாறு, மாவட்ட நிர்வாகம் சார்பில் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கருவிகளை கண்காணிக்க வேண்டிய தேசிய கடல் ஆராய்ச்சிக் குழுவினர் வருகை தள்ளிச் செல்கிறது. இதுவரை அதற்கான தேதியும் அறிவிக்கப்படாத நிலையில், பணிக்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதில் மாவட்ட நிர்வாகத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.
Leave a Reply