காட்பாடியில் உள்ள தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலையில் (டெல்) இன்று காலை திடீரென டேங்க் வெடித்து சிதறியதில் அதிகாரிகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தமிழ்நாடு வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள ரசாயன டேங்க் ஒன்றை மற்றொரு இடத்துக்கு மாற்றம் செய்யும் பணி இன்று காலை நடந்தது. இதையடுத்து தொழிற்சாலையில் உள்ள தொழில்நுட்ப பணியாளர்கள் அந்த இடத்தை சுத்தம் செய்யும் பணியில் காலை 10.15 மணியளவில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென டேங்க் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் கருப்பையா, முரளி படுகாயம் அடைந்தனர். இதில், கருப்பையாவின் இரு கண்களும் பாதிக்கப்பட்டன. கிரி, பிரகாசம், ராஜசேகர், நீலவண்ணன், எழில்வாணன் ஆகிய 5 ஊழியர்கள் லேசான காயம் அடைந்தனர். அனைவரும் உடனடியாக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். கருப்பையா, முரளியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித் துள்ளனர்.
Leave a Reply