வள்ளியூர்: கூடன்குளம் அணுமின் நிலையத்திற்கு சர்வதேச அணுசக்தி உற்பத்தியாளர் கூட்டமைப்பைச் சேர்ந்த 40 விஞ்ஞானிகள் ஆய்வுக்காக இன்று வந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் ரஷ்யா நாட்டு உதவியுடன் சுமார் 13 ஆயிரத்து ஐநூறு கோடி ரூபாய் தி்ட்ட மதி்ப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது.
முதல் அணு மின் உலை உற்பத்தி இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கூடன்குளம் அணுமின் நிலையத்தில் சர்வதேச தரத்துத்துடன் கட்டப்பட்டு வரும் அணு மின் நிலைய பிரிவுகளை பார்வையிட சர்வதேச அணுசக்தி உற்பத்தியாளர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று பார்வையிடுகின்றனர்.
கட்டுபாட்டு அறை, முதல் மற்றும் இரண்டாம் அணு உலைகளின் கட்டுமான பணிகள், ஜெனரேட்டர் அறை, கடல் நீரை நல்ல நீராக மாற்றும் சுத்தகரிப்பு ஆலை, கடலுக்குள் இருந்து தண்ணீரை உள்ளுக்குள் இழுத்து அணு உலைகளை குளிர்விக்கும் கெய்சன் உள்ளிட்ட பல அமசங்களை சர்வதேச அணுசக்தி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பார்வையிடுகின்றனர்.
இதனால் கூடன்குளம் பகுதியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Leave a Reply