கொசுக்களை விரட்டும் மொபைல்போன் ரிங்டோன்

posted in: மற்றவை | 0

புதுடில்லி:ரத்தம் உறிஞ்சும் கொ சுக்களை விரட்ட, கொசுவர்த்திச் சுருள், ஸ்பிரே, க்ரீம் போன்றவை இனித் தேவையில்லை. அதற்குப் பதிலாக சில மொபைல் போன்களிலிருந்து வரும் ஒலியே, கொசுக்களை விரட்டி விடுகிறது.

உலகில், மொபைல் போன் சந்தையில் குறிப்பிட்ட இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு திட்டங்களை, பல மொபைல் நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் இப்போது, கொசுவை விரட்டும் ரிங்டோன்கள் பிரபலமாகி வருகின்றன.

மனிதனின் காதால் கேட்க முடியாத அள வுக்கு மெல்லிய ஒலி அலைகள் கொண்ட ரிங்டோன்கள் மொபைல் போன்களிலிருந்து வெளிப்படும். இந்த ரிங்டோன்கள், மொபைல் போன் வைத்திருப்பவரைச் சுற்றி ஒரு மீட்டர் தூரத்துக்கு கொசுவை அண்டவிடாமல் துரத்தி விடும்.இதுபோன்ற மொ பைல் போன்களை “மைக்ரோவேவ் இன்பர் மேட்டிக்ஸ் லிமிடெட்’ நிறுவனமும், வேறு சில நிறுவனங்களும் வெளியிட்டுள்ளன.

மேலும், www.gackoandfly.com , www.jetcityorange.com ஆகிய வெப்சைட்டுகளும் இதுபோன்ற ரிங்டோன்களை இலவசமாகத் தரவிறக்கம் செய்து தருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *