புதுடெல்லி : தகவல் தொழில்நுட்பம் மற்றும் பீபிஓ துறையில் இந்த ஆண்டு 1.5 லட்சம் பேருக்கு புதிதாக வேலை வாய்ப்பு கிடைக்கும் என நாஸ்காம் அமைப்பு தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பீபிஓ துறையின் ஏற்றுமதி 5.5 சதவீதம் அதிகரித்து ரூ.2.28 லட்சம் கோடியாக அதிகரிக்கும். அதேசமயம், உள்நாட்டு வர்த்தகம் இந்த ஆண்டில் 12 சதவீதம் அதிகரித்து ரூ.66,200 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நாஸ்காம் புள்ளிவிவரம் கூறுகிறது.
இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவர் சோம் மிட்டல் கூறியதாவது:
சர்வதேச பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துள்ள நிலையில், சாப்ட்வேர் மற்றும் பீபிஓ துறை வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி உள்ளது.
இதனால் வரும் 2010&11ம் நிதியாண்டில் இத்துறையின் ஏற்றுமதி 13 முதல் 15 சதவீதம் உள்நாட்டு வர்த்தகம் 15 முதல் 17 சதவீதமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply