சேலம்: ‘ஜவுளி ஆலைகள், மின் உற்பத்திக்காக உபயோகப்படுத்தும் திரவ எரிபொருட்கள் மீதான கலால் மற்றும் சுங்கவரியை நீக்க வேண் டும்’ என, தென்னிந்திய பஞ்சாலைகள் கூட்டமைப்பு (சைமா) வேண்டுகோள் விடுத்துள்ளது.
சைமா அமைப்பின் துணைத் தலைவர் தினகரன், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு விவரம்: கடந்த பட்ஜெட்டில், செயற்கை இழையின் மீதான கலால் வரி 4லிருந்து 8 சதவீதமாக அதிகரிக்கப்பட் டது. செயற்கை இழைகள், ஜவுளித்துறையின் முக்கிய கச்சா பொருளாக உள்ளது. எனவே, செயற்கை இழை மீதான கட்டாய கலால் வரியை நீக்க வேண்டும். தொழில்நுட்ப ஜவுளி உற்பத்திக்கான ஸ்பான்டெக்ஸ், லைக்ரா போன்ற நூல்கள் மற்றும் செயற்கை இழையை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும். சேர்த்து வைக்கப்பட்ட சென்வாட் கிரெடிட்டை, ஜவுளி ஆலைகளுக்கு ஒரே முறையில் திரும்பக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவுளி ஆலைகள், மின் உற்பத்திக்காக உபயோகப்படுத்தும் திரவ எரிபொருட்கள் மீதான கலால் மற்றும் சுங்கவரியை நீக்க வேண்டும்.
ரிங் பிரேம்கள் நீங்கலாக, ஜவுளி மற்றும் துணித்துறையினர் உபயோகப்படுத்தும் காம்பாக்ட் ஸ்பின்னிங் மற்றும் அனைத்து இயந்திரங்களையும், கலால் மற்றும் சுங்க வரிகளிலிருந்து விலக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும், இந்த இயந்திரங்களுக்கு தேவையான உதிரி பாகங்களுக்கும், கலால் மற்றும் சுங்க வரிகளிலிருந்து விலக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்தியாவில், ஜவுளி உற்பத்தி செய்யும் மாநிலங்களில், தற்போது, கடும் மின் தட்டுப்பாடு நிலவுகிறது. திரவ எரிபொருட்களின் மீதான அதிகப்படியான வரிகள் காரணமாக, ஆலைகள் தாங்களே மின் உற்பத்தி செய்யும் முயற்சியும் தடைபட்டுள்ளது. தற்போது, திரவ எரிபொருட்களான பர்னஸ் ஆயில், எல்.டி.ஓ., மற்றும் உயர்வேக டீசல் மீது கலால் மற்றும் சுங்க வரிகள் விதிக்கப்படுகின்றன. ஆகவே, ஜவுளி மற்றும் துணித்துறையினர் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக உபயோகப்படுத்தும், அனைத்து திரவ எரிபொருட்களின் மீது விதிக்கப்படும் கலால் மற்றும் சுங்க வரிகளை முற்றிலும் நீக்க வேண்டும்.
திருத்தப்பட்ட மதிப்பீட்டில் தொழில் நுட்ப மேம்பாட்டு நிதிக்கு நடப்பு ஆண்டுக்கு மேலும் இரண்டாயிரம் கோடி ரூபாயும், வடகிழக்கு பகுதிக்கான ஒதுக்கீட்டுடன் ஜனவரி – டிசம்பர் 2010 வரையுள்ள தேவையைப் பூர்த்தி செய்ய மேலும் மூவாயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய கடனாக 5 சதவீத வட்டியில், அனைத்து ஜவுளி ஆலைகளுக்கும் வழங்க வேண்டும்.தற்போது காற்றாழைகள் நிறுவி இயக்குவதற்கும், பழுது பார்த்து பராமரிப்பதற்கும் பஞ்சாலைகள் செலுத் தும் சேவை வரியானது சென்வாட் கிரெடின் விதிகள் படி இன்புட் சர்வீசாக கருதப்பட வேண்டும். ஏற்றுமதி சம்பந்தப்பட்ட செயல்களை, சேவை வரியிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும். இந்த வேண்டுகோள்களை, மத்திய அரசு ஏற்று, வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் அதற்கான நிவாரணம் அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply