சென்னை, பிப். 2: தனியார் பள்ளிகளில் திரட்டப்பட்ட பல்வேறு வகையான கட்டணம் உள்ளிட்ட விவரங்கள், பிப்ரவரி 5}ம் தேதிக்குள் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரிடம் தாக்கல் செய்யும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தனியார் பள்ளிகளில் கட்டண வசூலைத் தடுக்க, தமிழ்நாடு பள்ளிகள் கட்டண முறைப்படுத்துதல் சட்டம்}2009 கொண்டு வரப்பட்டது. தனியார் பள்ளிகளில் கட்டணத்தை நிர்ணயிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு, தனியார் பள்ளிகளில் வசூலிக்கும் 12 வகையான கட்டணங்கள், உள்கட்டமைப்பு வசதி ஆகியவைகளை உள்ளடக்கிய படிவத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படிவம் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் தரப்பட்டுள்ளது. படிவத்தில் உள்ள விவரங்களை சேகரித்து மறு ஆய்வு செய்யவும் குழு உத்தரவிட்டுள்ளது. இப்போது படிவத்தில் சேகரிக்கப்பட்ட விவரங்கள் உண்மையானதா என்பது பற்றி ஆய்வு நடந்து வருகிறது.
இந்தப் படிவத்தில் உள்ள விவரங்களை வரும் பிப்ரவரி 5}ம் தேதிக்குள், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரிடம் அளிக்கும்படி குழு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
அதன்படி பிப்ரவரி 5}ம் தேதிக்குள் படிவ விவரங்களை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரிடம் ஒப்படைப்பதற்காக, மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து குழு தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜனிடம் இந்த விவரங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Leave a Reply