நொய்டாவில் சாம்சங் நிறுவனத்தின் புதிய ஏ.சி., தயாரிப்பு பிரிவு

9515607நொய்டா: நொய்டா தொழிற்பேட்டையில் குளிர்பதன ஏ.சி., தயாரிப்புக்கு என புதிய பிரிவினை சாம்சங் நிறுவனம் தொடங்கி உள்ளது. மின்சாதன பொருள்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனம் சாம்சங். இந்நிறுவனம் தற்போது, ஏ.சி., விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக நொய்டாவில் புதிய ஏ.சி., தயாரிப்பு பிரிவினை தொடங்கியுள்ளது. இதனை அந்நிறுவனத்தின் ‌தலைவர் ஜூட்ஷி தொடங்கி வைத்தார்.

நிறுவனத்தை தொடங்கி வைத்த ஜூட்லி, இதுகுறித்து கூறும்போது, தற்போது தொடங்கப்பட்டுள்ள ஆலை ஆண்டுக்கு 6 லட்சம் ஏ.சி.​ யூனிட்டுகளைத் தயாரிக்கும் திறன் கொண்டது. ஏற்கெனவே சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் 6 லட்சம் ஏ.சி.​ இயந்திரங்கள் தயாரிக்கப்படுகிறது.​ தற்போது புதிய ஆலை தொடங்கப்பட்டுள்ளதால்,​​ இந்நிறுவன உற்பத்தி ஆண்டுக்கு 12 லட்சமாக உயரும் என்று கூறியுள்ளார்.

மேலும், வாடிக்கையாளர்கள் புகார் செய்த ஒரு மணி நேரத்தில் பழுது நீக்குவோர் சென்றடையும் வகை செய்யப் பட்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு மேல் பழுது நீக்க காலதாமதமானால்,​​ மாற்று ஏ.சி.​ பொருத்தித் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ​

இந்த ஆண்டு 10 லட்சம் ஏ.சி.க்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், இதுகுறித்து மேலும் கூறும்போது, மின் அழுத்த வேறுபாட்டின்போது, சீரான செயல்பாட்டினை அளிப்பதற்காக, புதிய வகை ஏ.சி.,களில் யு.டி.ஆர் கம்ப்ரஸர்கள் பயன்படுத்தப் படுவதாகவும், இந்த எஸ் வரிசை கம்ப்ரஸர்களுக்கு ஸ்டெபிலைஸர்கள் தேவையில்லை என்றும் கூறினார்.

இதுதவிர, மைக்ரோஸ்கோபிக் வைரஸ்கள் மற்றும் துர்நாற்றங்களை வெளியேற்றுதல், டியோடரைஸிங் பில்டர்கள் என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த வகை ஏ.சி.,களில் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *