புதுடில்லி : கண்ணிவெடிகளை கண்டறியும் “உளவு குண்டு’ வாகனத்தை எல்லை பாதுகாப்பு படையினர் தயாரித்துள்ளனர்.
அசாம்- மேகாலயா எல்லைப் பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த வீரர்கள் எதிரியின் முகாமுக்குள் சென்று உளவு பார்க்கும் சிறிய வாகனத்தை வடிவமைத்துள்ளனர். இதன் விலை 20 ஆயிரம் ரூபாய். இந்த வாகனம், தான் செல்லும் வழியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகளை கண்டு பிடித்து விடும். தேவைப்பட்டால் எதிரியின் முகாமை தகர்க்கவும் இந்த வாகனத்தால் முடியும். இந்த குட்டி வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் எதிரி முகாமில் நடக்கும் நிகழ்ச்சிகளை 200 மீட்டர் தூரத்திலிருந்து பதிவு செய்ய முடியும். ரிமோட் கருவி மூலம் இந்த கருவி இயங்குகிறது. இதற்கிடையே, சக்தி வாய்ந்த குண்டுகளை கண்டறிய உதவும் தனுஷ் என்ற ஜாமர் கருவியை வடிவமைத்த எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
Leave a Reply