புதுடெல்லி : ‘விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இறப்பு சான்றிதழை இலங்கை அரசு அனுப்பியுள்ளது’ என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சண்டையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு ராணுவம் அறிவித்தது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக பிரபாகரன் அறிவிக்கப்பட்டு இருந்தார். இதனால், பிரபாகரனின் இறப்பு சான்றிதழை பெற சி.பி.ஐ. அதிகாரிகள் முயற்சி செய்தனர். பிரபாகரனின் இறப்பு சான்றிதழ் சி.பி.ஐ.க்கு கிடைத்து விட்டதா என்பதை தெரிந்து கொள்ள தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு ஒன்று அனுப்பப்பட்டது.
இதற்கு, சி.பி.ஐ. கடந்த மாதம் 27ம் தேதி அனுப்பிய பதிலில், Ôபிரபாகரன் இறப்பு சான்றிதழ், இதுவரை சி.பி.ஐ.க்கு கிடைக்கவில்லைÕ என்று குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து ப. சிதம்பரத்திடம் நிருபர்கள் நேற்று கேட்டபோது, Ôஇலங்கை அரசு அனுப்பிய பிரபாகரன் இறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளதாக சி.பி.ஐ. என்னிடம் தெரிவித்துள்ளதுÕÕ என்றார்.
இந்தியா செல்லும் அமெரிக்கர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது பற்றி கேட்டதற்கு, ÔÔஅமெரிக்க அரசு இதுபோன்ற எச்சரிக்கைகளை அடிக்கடி வெளியிடும்ÕÕ என்றார்.
ÔÔமகாராஷ்டிரா மக்களுக்கே மும்பை சொந்தம் என்று சிவசேனா கூறுவதை ஏற்க முடியாது. எல்லா இந்தியருக்கும் மும்பை சொந்தம். அங்கு விளையாட வரும் ஆஸ்திரேலிய, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்ÕÕ என்றும் சிதம்பரம் கூறினார்.
Leave a Reply