டெல்லி சென்றிருந்த துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 11 மணியளவில் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டசபையின் புதிய கட்டிடம் திறப்பு விழா அழைப்பிதழை டெல்லியில் முக்கிய தலைவர்களை சந்தித்து நேரில் கொடுக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் கலைஞர் உத்தரவிட்டார்.
அதன்படி டெல்லி சென்று ஜனாதிபதி, பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, மத்திய மந்திரிகள் பிரணாப்முகர்ஜி, பரூக்மரைக்காயர், மம்தா பானர்ஜி, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஸ்மா சுவராஜ், பாராளுமன்ற சபாநாயகர் மீராகுமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து அழைத்தேன். பலர் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
மத்திய ரெயில்வே மந்திரி மம்தாபானர்ஜியை சந்தித்த போது, தமிழ்நாட்டில் பல ரெயில்வே திட்டங்கள் அறிவிக்கப்பட்டதற்கு முதல்வர் சார்பில் நன்றி தெரிவித்தேன். அவர் மகிழ்ச்சி அடைந்தார்.
புதிய சட்டமன்ற கட்டிட திறப்பு விழா முக்கியத்துவமானது. இதில் கலந்து கொள்ளும்படி எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா உள்பட அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்படும்.
அழைப்பிதழ் கொடுப்பதற்காகத்தான் டெல்லி சென்றேன். எனவே வளர்ச்சி திட்டங்கள் பற்றி பேசவில்லை.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 1
Leave a Reply