சென்னை: கண் பார்வையற்றவர்களுக்கான ‘பிரெய்லி’ முறை எழுத்துக்களை அறிமுகப்படுத்திய லூயி பிரெய்லியின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய 2 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்.பி.ஐ.,) வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் எம்.எம். மாஜி கூறும்போது,
இந்த நாணயம் 5.62 கிராம் எடை கொண்ட துருப்பிடிக்காத எவர்சில்வரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 83 சதவீதம் இரும்பும், 17 சதவீதம் குரோமியமும் கலந்துள்ளன.இந்த நாணயம் 27 மில்லி மீட்டர் விட்டம் கொண்டது.
நாணயத்தின் பின்புறத்தில் லூயி பிரெய்லியின் படம் நடுவில் பொறிக்கப்பட்டிருக்கும். மேற்புறத்தில் அவரது பெயர் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் இருக்கும், படத்தின் கீழ்புறம் அவரது பெயர் ‘பிரெய்லி’ முறையில் எழுதப்பட்டிருக்கும். இதேபோல, முன்புறத்தில் நாணயத்தின் முகம் இரு படுக்கைக் கோடுகளால் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். நடுப்பகுயின் இடதுபுறம் அசோகா தூணின் சிங்க முகம் பொறிக்கப்பட்டிருக்கும். நடுப்பகுதியின் வலப்புறத்தில் நாணயத்தின் மதிப்பு இலக்கம் ‘2’ என்பது சர்வதேச எண் அளவில் பொறிக்கப்பட்டிருக்கும். மேற்புறத்தில் இந்தியா என்று ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும் என்று கூறினார்.
Leave a Reply