புதுடில்லி : நிதிக்குழு அளித்த 2009-2010ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்சபாவில் இன்று தாக்கல் செய்தார்.
அதன் முக்கிய அம்சங்கள் : 2010-11ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.75 சதவீதம் அதிகரிக்கும்; 2011-12ம் நிதியாண்டில் 9 சதவீதம் உயரும்; 2009-10ம் நிதியாண்டில் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் இரண்டு இலக்க எண்களாக அதிகரித்துள்ளது; உணவு பணவீக்கம் உணவுப் பொருட்கள் தொடர்பான பிற துறைகளையும் வளர்ச்சி அடையச் செய்துள்ளது; 2009-10ம் ஆண்டில் பண்ணை நிலம் தொடர்பான தொழில்கள் 0.2 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது; விவசாய வளர்ச்சிக்காக 4 சதவீத முதன்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது; தங்கம் உற்பத்தி செய்யும் உலகின் முன்னணி நாடுகளில் 557.7 டன் உற்பத்தியுடன் இந்தியா 10வது இடத்தில் உள்ளது; 2009ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் நாட்டின் ஏற்றுமதி 20.3 சதவீதம் சரிந்துள்ளது; 2009ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை இறக்குமதி தொழில்கள் 23.6 சதவீதம் சரிவடைந்துள்ளது; ஏப்ரல்-டிசம்பர் கால இடைவெளியில் அமெரிக்க டாலருக்கு நிகரான வர்த்தக இடைவெளி 76.24 பில்லியனாக உள்ளது; 2008-09ம் கால இடைவெளியில் உலகில் அதிக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் இந்தியா 32.5 சதவீதம் சேமிப்பும்; 34.9 சதவீதம் முதலீடும் செய்துள்ளது. இவ்வாறு ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
Leave a Reply