பைபர் கிளாஸ் சிலிண்டரில் சமையல் எரிவாயு சப்ளை

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_71885317565புதுடில்லி:சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனைக்கு, “காம்போசிட் டிரான்ஸ்லூசன்ட் பைபர் கிளாஸ் சிலிண்டரை’ அறிமுகப்படுத்துவதன் மூலம் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் உற்பத்தியை விரிவுபடுத்த, அரசு கொள்கையளவில் அனுமதி வழங்கி உள்ளது.

ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா கூறியதாவது:

இந்த புதிய வகை பைபர் கிளாஸ் சிலிண்டர்கள் மூலம் விற்பனை செய்யப்படும் எரிவாயுவிற்கு, மானியம் வழங்கப்பட மாட்டாது. இவ்வகை சிலிண்டர்களில் எரிவாயு இருப்பது வெளியில் தெரியும் வகையில் சிலிண்டர் பைபர் கிளாஸ் தயாரிப்பில் இருக்கும். இந்த புதிய வகை சிலிண்டர்கள், தற்போதைய சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாற்றாக அல்லாமல், சில தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில், தனியே விற்பனை செய்யப்படும்.

இது பல்வேறு வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. அங்கெல்லாம், இரும்பு சிலிண்டர்களை போன்று இதுவும் பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பின்(பி.இ.எஸ்.ஓ.,) முறையான அனுமதி பெற்ற பின்னரே, இந்த வகை சிலிண்டர்கள் புழக்கத்தில் விடப்படும்.இவ்வாறு முரளி தியோரா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *