யாழில் இந்தியா தூதுவராலயம் திறக்கும் நோக்கம், தமிழர் பண்பாட்டை சிதைத்து, சமுதாய சீரழிவை செயல்படுத்தவே

posted in: உலகம் | 0

china_indiaஇந்தியா யாழில் தூதுவராலயம் திறக்கும் நோக்கம் இந்திய உளவுபிரிவான “றோ” அங்கே அலுவலகம் திறந்து தமிழர் பண்பாட்டை சிதைப்பதற்கும் தேசியத்தில் உள்ள உள்ள மாணவர்களை அழித்து யாழில் சமுதாய சீரழிவை செயல்படுத்தவுமே என புலம்பெயர் தமிழர் சமூக அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


இது தொடர்பாக புலம்பெயர் தமிழர் சமூக அமைப்பு விடுத்துள்ள அறிக்கை:-

உலக தமிழர்களே! ஈழ தமிழர்களே! யாழ் தமிழர்களே!

தமிழர்களை இன்னும் அடிமையாக்கும் எண்ணத்தில் யாழில் தூதுவராலயம் திறக்க இருக்கும் அந்நிய அழிப்பு சக்திய மக்கள் பலத்தால் தடுப்போம்.

இந்தியா யாழில் தூதுவராலயம் திறக்கும் நோக்கம் இந்திய உளவுப் பிரிவான “றோ” அங்கே அலுவலகம் திறந்து, யாழில் மக்களை தங்கள் அடிமை சேவகம் செய்ய வைப்பதற்கும், யாழில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்கும், தங்களுக்கு தலை ஆட்டும் துரோகிகளை தமிழர் மத்தியில் வளர்ப்பதற்கும், தமிழர் பண்பாட்டை சிதைப்பதற்கும், தேசியத்தில் உள்ள உள்ள மாணவர்களை அழித்து யாழில் சமுதாய சீரழிவை செயல்படுத்தவுமே அங்கு தூதுவராலயம் திறக்க இருக்கிறார்கள்.

இதை யாழ், ஈழ, உலக தமிழர்கள் தடுப்பதற்கு முயற்சி செய்யவேண்டும். மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து யாழ்ப்பாணத்தில் தென் ஆசிய பயங்கரவாதிகளின் தூதுவராலயம் திறப்பதை தடுப்போம்,

இல்லையேல் 1987-1990 போல மக்கள் மத்தியில் கஞ்சா, அபின் போன்ற போதைவஸ்துக்களை பாவனையில் கொண்டு வருவார்கள் இந்திய ஆதிக்க சக்திகள். கற்பழிப்புகளை தாங்களும் செய்து தங்கள் அருவருடிகளையும் செய்ய வைத்து, தமிழர் பண்பாட்டையும் கலாசாரத்தையும் கல்வியையும் அழிப்பார்கள்.

இந்தியாவை விட மோசமான நாடாக இந்தியாவின் அடிமையாக யாழ்பாணத்தை மாற்றுவதே அவர்கள் திட்டம். இதை நாங்க முளையிலே கிள்ளி எறிய புறப்படுவீர்!

எம் மக்களே!

1987 இந்திய இராணுவத்தால் செய்து முடித்த யாழ் வைத்தியசாலை படுகொலையை மறக்கவில்லை,

1987- இந்திய இராணுவத்தால் யாழ் ஊடகங்கள் அழிக்கபட்டதை மறக்கவில்லை,

1987-1990 அப்பாவி மக்களை, புத்திஜீவிகளை, போராளிகளை, தளபதிகளை, அழித்ததை மறக்கவில்லை,

1988 இல் அப்பாவி புளொட் போராளிகளை மாலைதீவை அழிக்க அனுப்பி அந்த போராளிகளை தாங்களே அழித்த இந்தியாவை மறக்கவில்லை,

1982-2009 தமிழ் போராளி குழுக்களுக்கு ஆயுதங்களை, பயிற்சிகளைக் கொடுத்து சகோதர பகையைத் தூண்டி அவர்களை அழித்த இந்தியாவை மறக்கவில்லை

புலம்பெயர் தமிழர் சமூக அமைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *