வங்கி வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட்டில் புதிய சலுகைகள்

2601849புதுடில்லி : வங்கி வாடிக்கையாளர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) முன்வைத்த கோரிக்கைகளை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டுள்ளார்.

எனவே, மத்திய பட்ஜெட்டில் வங்கி டெபாசிட் மீது வரிச் சலுகைகள் அதிகரிக்கப்பட உள்ளது. மத்திய பட்ஜெட் இந்த மாதம் 26ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணியில் மத்திய நிதித்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்து வந்த கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்திய வங்கிகள் சங்கம் சார்பாக, வங்கி வாடிக்கையாளர்கள் பயன் பெறும் வகையில் பல கோரிக்கைகள் நிதிஅமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன. அவற்றை ஏற்பதாக பிரணாப் உறுதி அளித்ததாக ஐபிஏ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

5 ஆண்டு வரையான ரூ.1 லட்சம் வரை பிக்சட் டெபாசிட்டுக்கு வருமான வரி விலக்கு இப்போது நடைமுறையில் உள்ளது. ஆனால், பங்குச் சந்தையுடன் இணைந்த சேமிப்பு மியூச்சுவல் பண்ட் (இஎல்எஸ்எஸ்) திட்டத்தில் 3 ஆண்டு முதலீடுக்கு வரி விலக்கு அளிக்கப்பட உள்ளது.இதனால், வங்கி டெபாசிட் கவர்ச்சியிழக்கின்றன. அத்துடன், மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் மீது நடுத்தர மக்களின் கவனம் குறைவாக உள்ளதால் ரூ.1 லட்சம் வரையான டெபாசிட் காலத்தை 5ல் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கும் அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாக உள்ளது. அத்துடன் வரி விலக்கு பெற டெபாசிட் உச்ச வரம்பும் ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட உள்ளது. மேலும், வங்கி டெபாசிட் மீது ஆண்டுக்கு ரூ.10,000க்கு மேல் பெறும் வட்டிக்கு வரி, பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த வட்டி, வருமான வரிவிலக்கு ரூ.25,000 ஆக உயர்கிறது. இதனால், ஓய்வு பெற்றோர், மூத்த குடிமக்கள் பயன் பெறுவர். இதுபற்றி என்பிஏ தலைமை செயல் அதிகாரி கூறுகையில், ‘‘வங்கிகளின் கோரிக்கைகள் அனைத்தும் வாடிக்கையாளர் நலன் அடிப்படையிலானது. அவற்றை ஏற்பதாக நிதி அமைச்சர் உறுதி அளித்துள்ளார்’’என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *