விடை தெரியாத போது தைரியமாக தெரியாது என கூறலாம் : வேலைவாய்ப்பு முகாமில் கனிமொழி எம்.பி., பேச்சு

posted in: அரசியல் | 0

tblarasiyalnews_1563227177திருச்சி : “தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்; எந்த கேள்விக்கும் விடை தெரியாது என்றால், அதை தைரியமாக தெரியாது என்று சொல்ல வேண்டும்’ என, கனிமொழி எம்.பி., கூறினார்.

முதல்வர் கருணாநிதியின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்ட தி.மு.க., சார்பில் நடத்தப்படும் வேலை வாய்ப்பு முகாம், நேற்று துவங்கியது.
வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்த கனிமொழி எம்.பி., பேசியதாவது: வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களை துறைவாரியாக பிரித்து, அதில் அதிக விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இது, தி.மு.க., சார்பில் தமிழகத்தில் நடக்கும் ஆறாவது வேலைவாய்ப்பு முகாம். “ஏ கேட்டகிரி’யில் முகாமை நடத்த, 230 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. குறிப்பிட்ட நிறுவனத்தில் மட்டுமே வேலை தேடாமல், எல்லா நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கிறதா என பார்க்க வேண்டும்.
சாதாரணமாக வேலைவாய்ப்பு முகாம் என்றால், 30 முதல் 35 நிறுவனங்கள் வரை பங்கேற்கும். ஆனால், இங்கு 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது, வேலை தேடுவோருக்கு வரப்பிரசாதம். இதில் வேலையை தேடிக் கொள்வது, இளைஞர்களின் திறமையை பொறுத்தது.
தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். எந்த கேள்விக்கும் விடை தெரியாது என்றால், அதை தைரியமாக தெரியாது என்று சொல்ல வேண்டும்; எதற்கும் ஏற்றவாறு மாற்றிக் கொள்ள தயாராக இருக்கிறேன் என, நிறுவனங்களுக்கு புரிய வைக்க வேண்டும். புதிய சிந்தனையாளர்களாக உங்களை மாற்றி, நேர்முகத் தேர்வில் நிரூபித்துக் காட்ட வேண்டும். இவ்வாறு கனிமொழி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *