வன்னிப்போர் காரணமாக தனது 2 கைகளையும் இழந்து, இரண்டு தங்கைகளையும் பறிகொடுத்து, சித்தசுவாதீனமுற்ற தந்தையுடனும், தாயாருடன் இந்தியாவில் தங்கியுள்ள சிறுவன் சஜீவன், தனது இழந்த கைகளில் ஒரு கையாவது செயற்கையாக பொருத்தும் நோக்கில் புலம்பெயர் தமிழர்களிடம் உதவ முடியுமா? என தனது நிலையை விளக்கி வேண்டுகோள் விடுத்துள்ளளார்.
17 வயதாகும் சிறுவன் சஜீவன் தனது பரிதாப நிலையை விளக்கி புலம்பெயர் தமிழ் மக்களிடம் உதவிக்கரம் நீட்டி வேண்டுகோள்;
அன்பு உள்ளம் கொண்ட எனது இனிய தமிழ் மக்களே!
17 வயதாகும் நான் வன்னியில் நடந்த போரில் செல்வீச்சு காரணமாக எனது 2 கைகளையும் இழந்தேன். அதே எறிகணை எனது இரண்டு தங்கைகளையும் பலி கொண்டது. தங்கைகள் இறந்து கிடப்பதையும், எனது இரு கைகளும் துண்டாகித் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த எனது தந்தை இன்றுவரை சித்த சுவாதீனமாக இருக்கிறார்.
அவருக்கு இக் கொடூரத்தைப் பார்க்கும் சக்தியில்லை. தற்போது நான் இரு கைகளையும் இழந்து அம்மாவுடனும் சித்த சுவாதீனமற்ற எனது தந்தையுடனும் வசித்துவருகிறேன்.
சிறுவனாக இருக்கும் எனக்கு சிறு நீர் கழிக்கக் கூட உதவி தேவைப்படுகிறது, என்பதை நினைக்க என்மேல் எனக்கே வெறுப்பாக இருக்கிறது. எதற்காகவும் எவரிடமும் கையேந்தி நிற்பது தமிழன் மரபல்ல,
இருப்பினும் இப்போது புலம் பெயர் தமிழர்களிடன் உதவிகேட்கவேண்டிய சூழ்நிலையில் உள்ளேன். எனக்கு செயற்கைக் கைகள் பொருத்தலாம் என மருத்துவர் ஒருவர் கூறிய அறிவுரைக்கமைவாக நான் தற்போது எனது தாய் தந்தையருடன் சென்னை வந்து தங்கி இருக்கிறேன்.
எனக்கு குறைந்தது ஒரு செயற்கைக் கையையாவது பொருத்த புலம்பெயர் தமிழர்கள் உதவுவார்கள் என நான் நம்புகிறேன்.
தற்போது வெட்டப்பட்டுள்ள எனது கைகளின் அசைவை வைத்து இயங்கக் கூடிய செயற்கைக் கை ஒன்றை பொருத்த சுமார் 5 லட்சம் இந்திய ரூபா தேவைப்படுகிறது.
வீடிழந்து உடுக்க துணிகள் கூட இல்லாத நிலையில், என்னால் எப்படி இவ்வளவு பணம் கட்டமுடியும் என மனமுடைந்த நிலையில் நான் இருக்கையில், எனது நண்பர் ஒருவர் சொன்னார். புலம்பெயர் எமது உறவுகள் உனக்கு நிச்சயம் உதவிசெய்வார்கள் என்று.
அதனால் உங்களை நம்பி இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
அன்பு உள்ளம் கொண்ட எனது இனிய தமிழ் மக்களே! எனக்கு கொஞ்சமாவது உதவமுடியுமா ? நான் மீண்டும் 100% குணமடையாவிட்டாலும் வேறு ஒருவர் துணையின்றி எனது வேலையை நானே செய்ய எனக்கு செயற்கைக் கரங்கள் உதவியாக இருக்கும்.
பல கனவுகளோடு இருந்த என் வாழ்வில் இப்படி ஒரு பேரிடி விழும் என நான் ஒருபோதும் எண்ணியதில்லை. அதனால் என் வாழ்க்கையில் ஒரு சிறுவிளக்கை ஏற்றி வைப்பீர்களா புலம்பெயர் தமிழர்களே ?
இப்படிக்கு…
இருகரம் இழந்து உதவிக்கரத்துக்காக தவிக்கும்
சிறுவன் சஜீவன்.
அன்புள்ள இணைய நண்பர்களுக்கு,
என் பெயர் சஜீவன், இலங்கைச் சிறுவனான நான் எனது இரு கைகளையும் இரு தங்கைகளையும் கடந்த ஆண்டு நடந்த எறிகணை வீச்சொன்றில் இழந்து தவிக்கின்றேன். தற்போது சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டில் மருத்துவ உதவி பெறுவதற்காக தங்கியுள்ளேன்.
என்னுடைய முழு விபரங்களும் இந்த ஈ மெயிலில் இணைப்புகளாக உள்ளது. தயவு செய்து இவைகளை முழுமையாக வாசிக்கவும், வாசித்து எனக்கொரு நல்ல பதில் சொல்லவும். இந்த ஈ மெயிலை சக இணைய நண்பர்களோ அல்லது அவர்கள் சம்பந்தப்பட்ட வேறுயாருமோ பார்த்தால் தயவுகூர்ந்து என்மீது இரக்கம் கொண்டு மேலும் பல இணைய நண்பர்களுக்கு காட்டவும். ஏனெனில் எனக்கு மருத்துவ ரீதியாகவும் பண ரீதியாகவும் உதவி செய்யக்கூடிய நல்ல மனசு இணைய உலகுக்கு உண்டு.
இப்படிக்கு…
இருகரம் இழந்து உதவிக்கரத்துக்காக தவிக்கும்
சிறுவன் சஜீவன்
தமிழ்வின் குறிப்பு:
சஜீவன் என்ற இச்சிறுவன் எம்மைத் தொடர்பு கொண்டு உதவியை கேட்டதன் காரணமாக நாம் நேரில் சென்று சிறுவன் சஜீவனை சந்தித்து எடுத்த புகைப்படங்களும் இணைத்துள்ளோம். கீழே வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நாம் சந்தித்து எடுக்கப்பட்டவை. நீங்கள் உதவி செய்ய விரும்பின் கீழேயுள்ள டொனேசன் என்ற பட்டினை அழுத்து உங்களுடைய அன்பளிப்பை செய்யலாம். இது தொடர்பில் உதவி தேவைப்படின் 0041796357420 (சுவிஸ்) இந்த தொலைபேசியினூடா தொடர்பு கொள்ளலாம்.
இவருடைய இரண்டு கைகளுக்கான சிகிச்சைக்கு தேவையான தொகை 12 இலட்சம் இந்திய ரூபாய் எதிர்பார்க்கப்படுகின்றது.
Leave a Reply