அமெரிக்கா முன்னாளில் ஆதரவு வழங்கியவர்களையே இன்னாளில் இரட்டை வேடம் போட்டு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் எனக்கூறி தாக்குகிறது இரான் அதிபர் மஹ்மூத் அஹமதி நிஜாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆப்கன் அதிபர் கர்சாயுடன் கூட்டாக அமர்ந்து செய்தி மாநாடொன்றில் மஹ்மூத் அஹமதி நிஜாத் பேசும்போது, ‘ஆப்கானிஸ்தானில் அமைதி் திரும்ப வேண்டுமானால், அமெரிக்கப் படைகளும் மற்றைய வெளிநாட்டுப் படைகளும் வெளியேற வேண்டுமென தெரிவித்தார்.
தாலிபன் கிளர்ச்சியாளர்களுக்கு இரான் உதவி வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகின்றது.
தாலிபன்களுடன் சமரசம் காணுமாறு கர்சாய் மீது கணிசமான வெளிநாட்டு வற்புறுத்தல்கள் எழுந்துவருகின்றன.
இந்த நிலையில் கர்சாய் பாகிஸ்தான் புறப்பட்டுச் சென்றுள்ளார்
Leave a Reply