சென்னை : அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : மத்திய அரசு ஊழியர்களைப் போன்று தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும்; இந்த அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோர், ஓய்வூதியம் பெறுவோர் குடும்பத்தினர் ஆகியோருக்கு வழங்கப்படும்; 2010ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து கணக்கிடப்பட்டு நிலுவையின்றி இந்த புதிய அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும்; இதன் அகவிலைப்படி உயர்வு காரணமாக அரசுக்கு கூடுதலாக ரூ.1448 கோடி செலவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Leave a Reply