புதுடில்லி : இந்தியாவில் முதல்நிலை மற்றும் தொழிற்நுட்ப கல்வியின் தரத்தை மேம்படுத்த கூடுதலாக 1.05 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.4,772 கோடி) கடன் உதவி வழங்க உலக வங்கி முடிவு செய்துள்ளது.
மேலும் சர்வ ஷிக்சா அபியன் திட்டத்திற்காக 750 மில்லியன் டாலர்கள் (ரூ.3,409 கோடி) கடன் கொடுக்கவும் உலக வங்கி திட்டமிட்டுள்ளது. அத்துடன் 200 இன்ஜியரிங் கல்வி நிறுவனங்களில் தொழிற்நுட்ப கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக 300 மில்லியன் டாலர்களும்(ரூ.1,363 கோடி) உலக வங்கியால் கடனாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் கூடுதலாக தகுதியுடைய இன்ஜினியர்களை உருவாக்க முடியும் என கல்வி நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இந்த கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் 35 ஆண்டுகள் கால இடைவெளியில் திருப்பி செலுத்தப்படும் எனவும், அரசு சார்பில் கூடுதலாக 10 ஆண்டுகள் நீடிக்கப்படும் னெவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. சர்வ ஷிக்சா அபியன் திட்டத்திற்கு உலக வங்கி ஏற்கனவே 1.1 பில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களின் தரத்தை உயர்த்துவதற்காகவும், அவற்றை ஊக்கப்படுத்துவதற்காகவும் இத்தகைய கடன்களை வழங்கி வருவதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
Leave a Reply